Tuesday 22 November 2016

படைக்கப்பட்டாள்... | Thus, SHE was Born...




கடவுள் மனிதர்களைப் படைத்துக்கொண்டிருந்தார்.
பல கோடி வருடங்களாக ஒரே படைப்பு முறையைப் பயன்படுத்திப் பயன்படுத்திச் சலிப்படைந்து இந்தப் படைப்பு முறையை மாற்றலாம் என்று முடிவு செய்தார்.
புதுவிதமாக யோசித்து, திரைப்படங்களை ஒன்று சேர்த்து ஒவ்வொரு மனிதனையும் படைக்கலாம் என்ற புது முறையை உருவாக்கினார்.

திரைப்படங்களைக் கொண்டு ஒவ்வொரு மனிதரையும் படைத்துக்கொண்டிருந்தார்.
ஒரு ஆண்மகனைப் படைத்த பின்பு பெண் மகளைப் படைக்கத் தயாரானார்.
கௌத்தம் வாசுதேவ் மேனன், மணிரத்னம், வசந்த், பாலாஜி சக்திவேல் ஆகிய இயக்குனர்களின் தமிழ் படங்களோடு கவித்துவமான  மலையாள படங்களையும் சிறிது சேர்த்தார். 
இவைகளோடு கொரியன் படங்களும் பிரெஞ்சு படங்களும் சேர்க்கப்பட்டன. இறுதியாகச் சில ஆங்கிலப் படங்களையும் சேர்த்தார்.
இவ்வனைத்தும் சேர்ந்த கலவையாக அப்பெண் படைக்கப்பட்டாள். 

அப்பெண்ணைப் படைத்த பின்பு தான் ஒரு சந்தேகம் வந்தது, கடவுளுக்கு.
ஆங்கிலப் படங்களில் தவறுதலாக க்ரிஸ்டோபர் நாலன் படங்களைக் கலந்துவிட்டதைக் கவனித்தார்.
இக் குறையே அப்பெண்ணுக்கு த்ரிஷ்டியாக அமைந்தது.  
அறிவாளியான  'இவளை' புரிந்துக்கொள்வது தான் சிக்கல்!

 இவள் தான் "அவள்" ?!?


0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives