Sunday 26 June 2016

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிமையாகத் தமிழில் டைப் செய்ய வேண்டுமா?

இன்றைய டெக் ஜெனரேஷன் தமிழர்களுக்கு, தங்களது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட்டில் தமிழில் டைப் செய்ய அவசியமோ ஆசையோ இருந்தாலும் அதைப் பூர்த்திச் செய்ய எளிமையான தமிழ் கீ-போர்ட் அப்ளிகேஷன் இல்லாமல் இருந்து வந்தது. அப்படிச் சிரமப்படும் பயன்பாட்டாளர்கள், கூகுளின், 'Google Indic Keyboard' ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எளிமையாக டைப் செய்ய உதவும் இந்தக் 'கூகுள் இண்டிக் கீ-போர்ட்' அப்ளிகேஷனின் சிறப்பம்சம் இதன் 'Transliteration' வசதி.






'Transliteration' என்றால் என்ன?

இன்றைய டெக் பயன்பாட்டாளர்களுக்குத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு தமிழில் டைப் செய்வது என்பது கடினான விஷயம். அவர்களே ஆங்கில எழுதகளைக் கொண்டு தமிழை எளிதாக டைப் செய்து விடுவர். இந்த இரண்டிற்கும் பாலமாக அமைவதே 'Transliteration' வசதி.
அதாவது "அம்மா" என்ற வார்த்தைக்கு "Amma” என நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தாலே போதுமானது. அது அழகு தமிழில் "அம்மா" என மாறிவிடும். இது பெரும்பாலான தமிழ் வார்த்தைகளுக்குச் சரியாகச் செயல்பட்டாலும், சில வார்த்தைகளை டைப் செய்யும்போதும் சிக்கல் எழலாம். தமிழ் வார்த்தையின் ஓசைக்கேற்ப ஆங்கில எழுத்துகளைச் சேர்த்து டைப் செய்து நீங்கள் விரும்பிய தமிழ் வார்த்தையைக் கொண்டுவந்துவிடலாம்.



​இல்லை, எனக்குத் தமிழ் எழுத்துகளைக் கொண்ட கீ-போர்ட் தான் வேண்டும் என்று விரும்பும் பயன்பாட்டாளர்களுக்குத் தமிழ் எழுத்துகளால் ஆன கீ-போர்ட் அமைப்பும் இந்தக் 'கூகுள் இண்டிக் கீ-போர்ட்' அப்ளிகேஷனில் அடங்கும். மேலும் பயன்பாட்டாளர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கீ-போர்ட் நிறத்தை 'Keyboard Theme' காட்சி அமைப்பைக் கொண்டு மாற்றிக்கொள்ளலாம்.



தமிழை தவிரக் கீழ் உள்ள இந்திய மொழிகளுக்கும் இந்தக் கீ-போர்ட் அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
- Assamese.
- Bengali.
- Gujarati.
- Hindi.
- Kannada.
- Malayalam.
- Marathi.
- Odia.
- Punjabi.
- Telugu.




ஹிந்தி மொழிக்கெனப் பிரத்யேகமான 'Handwriting Mode' வசதி அமைந்துள்ளது. இந்த வசதியைக் கொண்டு பயன்பாட்டாளர்கள் ஸ்க்ரீனில் ஹிந்தி வார்த்தைகளைக் கையால் எழுதி நுழைக்கலாம்.

Google Play Store Link:


0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives