Sunday 1 May 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan

ஹார்மன் கார்டன் ஒன்: (Harman Kardon One)

சமீப காலமாக புளூ-டூத் ஸ்பீக்கர்களின் பயன்பாடு அதிகரித்த வண்ணமே உள்ளது. எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல முடியும். பேட்டரியில் இயங்கும் தொழில்நுட்பம், ஒயர் எதுவும் இல்லாமல் இணைக்கும் தன்மை ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணங்கள்.

ஹார்மன் கார்டன் புகழ் பெற்ற ஜேபிஎல் நிறுவனத்தின் ஒரு அங்கம். ஜேபிஎல் நிறுவனம் பட்ஜெட் கேட்ஜெட்களை தயாரிக்க, ஹார்மன் கார்டன் நிறுவனம் பிரீமியம் கேட்ஜெட்களை தயாரிக்கிறது. இதன் சமீபத்திய வெளியீடு, இந்த ஹார்மன் கார்டன் ஒன் ப்ளூ-டூத் ஸ்பீக்கர். உலக அளவில் ஹெச்டிசி ஒன் M9 ஸ்மார்ட் போனோடு இந்த ஸ்பீக்கர் வெளியிடப் பட்டது. இந்த காரணத்தால், டிசைன் அளவில் ஹெச்டிசி நிறுவனத்தின் பங்களிப்பை பார்க்கலாம். 

மேலும், இது ஹெச்டிசி கனெக்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ஹெச்டிசி கேட்ஜெட்டைக் கொண்டும் இந்த ஸ்பீக்கரை எளிதாகப் பயன்படுத்தலாம். ஹெச்டிசி கேட்ஜெட்களை தவிர, அனைத்து பிராண்ட்களின் கேட்ஜெட்களைக் கொண்டும் இந்த புளூ-டூத் ஸ்பீக்கரை கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

புளூ-டூத் தவிர, என்எஃப்சி மூலமும் இந்த ஸ்பீக்கரை இணைத்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு பிரமாதமாகக் காட்சி அளிக்கும் இந்த புளூ-டூத் ஸ்பீக்கர், முழுக்க முழுக்க மெட்டல் பாடியைக் கொண்டுள்ளது. பவர் ஆன்/ஆஃப், புளூ-டூத், கால்கள், வால்யூம் ஆகியவற்றை இந்த ஸ்பீக்கரில் எளிதாக இயக்கலாம். ஸ்பீக்கரில் இருக்கும் மைக்ரோபோனைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் போன்கால்களை எளிதாக அட்டென்ட் செய்து பேசலாம்.

513 கிராம் எடையுள்ள இந்த  ஸ்பீக்கர், 2000mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இந்த பேட்டரி, 6 மணி நேரம் வரை தாங்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டு 40மி.மீ டிரைவர்களும் தனித்தனியே 6W வெளியீடைக் கொண்டுள்ளது. புளூ-டூத் 3.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த ஸ்பீக்கர், தெளிவான மற்றும் வலுவான ஒலியை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், சப் பாஸ் (sub-bass) ஒலி சற்று ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. 

இதன் இந்திய விலை ரூ.14,990
ஹூவாய் ஸ்மார்ட் வாட்ச்: (Huawei Smart Watch)

ஸ்மார்ட் வாட்ச்களுக்கான காலகட்டம் இது. அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட் வாட்ச்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில், ஹூவாய் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கும் இந்த வாட்ச், இந்தியாவில், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கேசிங் மற்றும் கறுப்பு நிற ஸ்ட்ராப்பைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. 

தரமான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், 1.4 இன்ச் 400*400 ரெசல்யூஷன் 286 PPI Amoled பேனலைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே, அனைத்தையும் கச்சிதமாகவும் தெளிவாகவும் காட்சி அளிக்கிறது. பாதுகாப்புக்காக சேப்பியரகிரிஸ்டல் (Sapphire Crystal) கிளாஸ் கொண்டுள்ள இந்த வாட்ச், பகல் வெளிச்சத்திலும் நன்றாக செயல்படுகிறது. வெளியில் இருக்கும் வெளிச்சத்துக்கேற்ப செயல்படும் ஆம்பியன்ட் லைட் (Ambient Light) சென்சாரும் இந்த வாட்ச்சில் அடங்கும்.

இந்த வாட்ச், ஒரே ஒரு பட்டனை வலப்பக்கத்தில் கொண்டுள்ளது. இந்த பட்டனைக் கொண்டு ஆன்/ஆஃப்/டிஸ்ப்ளே ஆஃப்/மெனு ஆகிய செயல்பாடுகளை இயக்கலாம். IP67 வாட்டர் ரெசிஸ்டன்ஸ்  தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், 45 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் ஆகிவிடும் 300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 1.5  நாள் வரை முழு சார்ஜில் இயங்கும் என்கிறது ஹூவாய். 

குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (Qualcomm Snapdragon) 400 பிராசஸர் 512 எம்பி ரேம் ஆகியவற்றைக் கொண்டு செயல்படும் இந்த வாட்ச், 4 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேலும், வைஃபை, புளூ-டூத் லோ-எனர்ஜி ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த வாட்ச்சில் ஹார்ட் ரேட்  சென்சார், ஆக்ஸிலேரோமீட்டர், ஜைரோஸ்கோப், பாரோமீட்டர் ஆகியவை அடங்கும். ஆண்ட்ராய்டு வியர் வெர்ஷன் 6.0.1-ல் இயங்கும் இந்த வாட்ச்சை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தோடு பயன்படுத்தலாம். 

ஸ்மார்ட் வாட்ச்சின் அத்தனை சேவைகளும் இந்த ஹூவாய் ஸ்மார்ட் வாட்ச்சில் அடங்கும் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்!

இதன் இந்திய விலை ரூ.22,999

Link:
http://www.vikatan.com/nanayamvikatan/2016-may-08/recent-news/118770-gadgets.art

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives