Sunday 24 April 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan


அசூஸ் ஜென்புக் UX303UB (Asus Zenbook UX303UB)

குறைந்த விலை, அழகான டிசைன், சிறந்த தொழில்நுட்பம் – இதுதான் அசூஸ் நிறுவனத்தின் கோட்பாடு. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள லேப்டாப், அசூஸ் ஜென்புக் UX303UB.

பார்ப்பதற்கு அழகாகவும் மெலிதாகவும் இருக்கும் இந்த லேப்டாப், 20 மி.மீ அகலமும் 1.45 கிலோ எடையும் கொண்டுள்ளது. 

Smoky Brown மற்றும் Icicle Gold ஆகிய இரு வண்ணங்களில் வரும் லேப்டாப், மூன்று USM 3.0 போர்ட்களை கொண்டுள்ளது. தவிர, ஒரு எஸ்.டி. கார்டு ஸ்லாட், HDMI போர்ட், மினி டிஸ்ப்ளே போர்ட், 3.5 ஆடியோ சாக்கெட் ஆகியவை அடங்கும். மேலும், பேக்-லைட் கீபோர்ட் பயன்படுத்த வாடிக்கை யாளர்களுக்கு கச்சிதமாக அமையும்.

13 இன்ச் 1920*1080 ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த லேப்டாப், 1TB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேலும், ஆறாவது ஜெனரேஷன் இன்டெல் கோர் i5-6200U 2.8GHz பிராசஸர் மட்டும் 8ஜிபி DDR3 ரேமைக் கொண்டு செயல்படுகிறது. 

64 பிட் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த லேப்டாப், Nvidia கரண்ட்-ஜென் கிராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளது. 

சராசரியான தினசரி பயன்பாட்டுக்கு இரண்டு மணி நேரம் வரை தாங்கும் இந்த லேப்டாப்பின் பேட்டரிதான் இதன் மிகப் பெரிய குறை. 

இந்த லேப்டாப்பின் இந்திய விலை ரூ.71,490
ஃபியோ A1 போர்டபுள் ஹெட்-போன் ஆம்ப்ளிஃபையர்!  (Fiio A1 Portable Headphone Amplifier)

ஆடியோ கேட்ஜெட்களுக்கு புகழ் பெற்ற சீன நிறுவனமான ஃபியோவின் புதிய படைப்பு இந்த ஃபியோ A1 போர்ட்டபுள் ஹெட்-போன் ஆம்ப்ளிஃபையர். மூல சாதனத்துக்கும் ஹெட்போனுக்கும் இடையே செயல்படும் இந்த கேட்ஜெட், ஒலியின் அளவை மட்டும் அதிகரிக்காமல் அதன் தன்மை யையும் மேன்மையாக்குகிறது. ஒலியில் கோளாறு அல்லது தரமான இசையை கேட்டு மகிழ நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த கேட்ஜெட்டை பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு சிறியதாக காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட் எளிதாக பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

மெட்டல் கேஸிங் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேட்ஜெட், கையில் வைத்து எளிதாகப் பயன்படுத்த லாம். 20 கிராம் எடை கொண்டுள்ள இந்த கேட்ஜெட், மேல் பகுதியில் மூன்று பட்டன்களைக் கொண்டுள்ளது. ஒரு பட்டன், பவர் மற்றும் ஈக்வலைஸைர் செட்டிங்கை மாற்றப் பயன்படுகிறது. மீதம் உள்ள இரு பட்டன்கள் ஒலியை மாற்றப் பயன்படுகின்றன. 

இது தவிர, ஒரு 3.5 மி.மீ அவுட்புட் சாக்கெட்டும் மேல் பகுதியில் அடங்கும். கீழ் பகுதியில் 3.5 மி.மீ இன்புட் சாக்கெட் மற்றும் சார்ஜ் செய்ய ஒரு யூஎஸ்பி போர்ட் அமைந்துள்ளது.

160mAh பேட்டரியைக் கொண்டு 12 - 13 மணி நேரம் வரை செயல்படும். 

இந்த கேட்ஜெட்டின் இந்திய விலை ரூ.1,999.

Link:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives