Sunday 17 April 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan


ஏம்ஸர் ஃபிட்ஸர் கா: (Amzer Fitzer Ka)

ஸ்மார்ட் போன் கேஸ், கேபிள், சார்ஜர் தயாரிப்பில் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள ஏம்ஸர் நிறுவனத்தின் ஆக்டிவிட்டி டிராக்கர் இது. 

கையில் அணியப்படும் இந்த டிராக்கரில் ஒரு கேப்சியூல் உள்ளது. இந்த கேப்சியூல்தான் சென்சார் மற்றும் ஹார்டுவேரைக் கொண்டுள்ளது. பிளாக், புளூ மற்றும் பிங்க் ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட பேண்ட்கள் இந்த டிராக்கரோடு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப இந்த பேண்ட்களை மாற்றிப் பயன் படுத்தலாம். மைக்ரோ USB போர்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த பேண்டை  அப்ளிகேஷன் மூலம் கேட்ஜெட்களோடு இணைத்துக் கொள்ளலாம்.

ஏம்ஸர் ஃபிட்ஸர் கா டிராக்கர், ஒரு டிஸ்ப்ளே மற்றும் ஒரு பட்டனைக் கொண்டுள்ளது. பட்டனைப் பயன்படுத்தி, நேரம், நடந்த தூரம், படிகள், பயன்படுத்தப்பட்ட கலோரி, இலக்கின் சதவிதம் போன்றவற்றை பயன்பாட்டாளர்கள் டிஸ்ப்ளேவில் பார்க்கலாம். இந்த பட்டனை அழுத்தி பிடித்தால் ஆன்/ஆஃப் ஆகும். இரண்டு முறை அழுத்தினால் Sleep டிராக்கிங் ஆன் செய்யப்படும். 

கிட்டதட்ட ஏழு நாட்கள் வரை இந்த டிராக்கரின் பேட்டரி உழைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால்,பேட்டரி தீர்ந்து சார்ஜ் செய்து ஆன் செய்தால், அந்த நாளைக்கான டேட்டா அனைத்தும் அழிந்துவிடுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
ஏம்ஸர் ஃபிட்ஸர் கா டிராக்கரின் இந்திய விலை ரூ.2,999.

பிளஸ்:

துல்லியமான செயல்பாடு.
பேட்டரி.
டிஸ்ப்ளே வசதி.
விலை.

மைனஸ்:

பேட்டரி தீர்ந்து சார்ஜ் செய்து ஆன் செய்தால் டேட்டா  அழிதல்.
இதன் அப்ளிகேஷனை பயன்படுத்த சற்று சிரமமாக இருக்கிறது.
டேக் USB-400 ஹெட்போன்: (TAG USB-400 Headphone)

பொதுவாக அனைத்து ஹெட் போன்கள் மற்றும் ஹெட் செட்கள் 3.5mm ஆடியோ ஜேக்கை கொண்டுதான் இயங்கும். ஆனால் இந்த டேக் USB-400 ஹெட் போன் USB போர்டைக் கொண்டு இயங்குகிறது. இதனால் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்களில் இந்த ஹெட் போனைப் பயன்படுத்த முடியாது. 

இந்த ஹெட் போனில் உள்ள மைக்ரோபோனை மேலும்கீழுமாக நகர்த்திக்கொள்ளலாம். மேலும் அதை இன்லைன் ரிமோட்டைக் கொண்டு ஆன்/ஆஃப் செய்துகொள்ளலாம். லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் மட்டுமே இந்த ஹெட் போனை பயன்படுத்த முடியும் என்ற காரணத்தைக்கொண்டு வாடிக்கையாளர்கள் சற்று சிரமமாகலாம். பெரும்பாலும் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் வேலை செய்யும் வாடிக்கையாளர்கள், வீடியோ கான்ஃப்ரன்ஸிங், ஆன்லைன் லேர்னிங், கால் சென்டர் ஆகியவற்றுக்குப் பயன்படுத்த இந்த ஹெட் போன் சிறப்பாக அமையும். 

முழுக்க பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெட் போனின் டிசைன் சுமார்தான். ஹெட் பேண்ட் அட்ஜஸ்ட் செய்ய சற்று லூஸாக இருந்தாலும் இயர் கப்கள் பயன்படுத்த  வசதியாக இருப்பதனால் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையலாம். இந்த ஹெட் போனில் உள்ள இன்லைன் ரிமோட்டைக் கொண்டு வால்யூம், மியூட், அன்மியூட், மைக்ரோபோன் மியூட் ஆகியவற்றை கன்ட்ரோல் செய்யலாம்.

இதன் இந்திய விலை ரூ.1,200.

பிளஸ்:

USB பிளக்.
மைக்ரோபோனின் தரம்.

மைனஸ்:

ஒலியின் தரம் மோசம்.
சுமாரான டிசைன்.
மைக்ரோபோன் எல்லா நேரங்களிலும் செயல்படுவதில்லை. 

Link:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives