Sunday 6 March 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan

சான்டிஸ்க் கனெக்ட் வயர்லெஸ்   ஸ்டிக் (SanDisk Connect Wireless Stick) 

பெரும்பாலான ஸ்மார்ட் போனில் எக்ஸ்டர்னெல் ஸ்டோரேஜ் கிடையாது. இன்டர்னெல் ஸ்டோரேஜ் மட்டும்தான். இந்தப் பிரச்னையைப் போக்க சான்டிஸ்க் நிறுவனம் தனது புதிய கேட்ஜெட்டான சான்டிஸ்க் கனெக்ட் வயர்லெஸ் ஸ்டிக் பென்-டிரைவை அறிமுகம் செய்துள்ளது.

பார்ப்பதற்கு சராசரி பென்-டிரைவைவிட சற்று பருமனாக காட்சி அளிக்கும் சான்டிஸ்க் கனெக்ட், ஸ்விட்ச்-ஆன் செய்தவுடன் ஒரு வைஃபை நெட்வொர்க்கை உருவாக்குகிறது. இந்த வைஃபை நெட்வொர்க்கோடு ஒரே நேரத்தில் மூன்று ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் கேட்ஜெட்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த பென்-டிரைவில் உள்ளவற்றை பயன்படுத்த ‘சான்டிஸ்க் கனெக்ட் டிரைவ்’ என்ற அப்ளிகேஷன் கேட்ஜெட்டில் இருக்க வேண்டும்.

சான்டிஸ்க் கனெக்ட் வயர்லெஸ் பென்-டிரைவோடு கேட்ஜெட்களை இணைப்பது சுலபமாக இருக்கிறது. இந்த பென்-டிரைவில் இருக்கும் போட்டோ, பிடிஎஃப் போன்றவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம். தரமான வீடியோக்களை மட்டும் பிளே செய்யும்போது அவை பிளேயாகத் தொடங்க சில வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பிளேயானவுடன் எந்தப் பிரச்னைகளும் இல்லை.  ‘சான்டிஸ்க் கனெக்ட் டிரைவ்’ அப்ளிகேஷனில் உள்ள வீடியோ பிளேயரைத்தான் பயன்படுத்த முடியும். ஆனால், இந்த பிளேயரில் ‘subtitles’ பயன்படுத்த முடியாதது ஒரு நெகடிவ்வாக அமைகிறது. மேலும், பிடிஎஃப்களை ‘landscape’ மோடில் இந்த அப்ளிகேஷனைக் கொண்டு பயன்படுத்த முடியவில்லை.

டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்போடு இணைத்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமென்ட்ஸ் ஆகியவற்றை இந்த பென்-டிரைவில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்த பென்-டிரைவை சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பென்-டிரைவை கிட்டத்தட்ட 4.5 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் என்கிறது சான்டிஸ்க் நிறுவனம்.

இந்த பென்-டிரைவ் மொத்தம் நான்கு மாடல்களில் வருகிறது.

16 GB - ரூ.1,725.

32 GB - ரூ.2,499.

64 GB - ரூ.3,599.

128 GB - ரூ.6,099.



ஃப்யோ எக்ஸ்7 (Fiio X7)

ஆடியோ கேட்ஜெட்களுக்கு பெயர்போன சீனாவின் ஃப்யோ (Fiio),  தனது புதிய அதிநவீன பிரத்யேகமான ஆடியோ பிளேயரான ஃப்யோ எக்ஸ்7-யை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த எக்ஸ் 7 ஆடியோ பிளேயர், 4 இன்ச் 480x800 பிக்ஸல் கெப்பாசிட்டி டச் ஸ்க்ரீனைக் கொண்டுள்ளது.

முழுக்க முழுக்க மெட்டலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடியோ பிளேயரின் மொத்த எடை 220 கிராம். தனது இடதுபக்கத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களை கொண்டுள்ளது. தனது வலதுபக்கத்தில் play/pause மற்றும் next/previous பட்டன்களைக் கொண்டுள்ளது. ஆடியோ பிளேயரின் கீழ் 3.5 மி.மீ ஹெட்-போன் சாக்கெட் அடங்கும். தவிர, சார்ஜ் மட்டும் டேட்டா டிரான்ஸ்ஃபர் செய்ய ஒரு யூஎஸ்பி போர்ட்டும் இங்கே அடங்கும்.

Rockchip RK3188 1.4GHz SoC பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேமைக் கொண்டு செயல்படும் இந்த ஆடியோ பிளேயர், 32 ஜிபி இன்டர்னெல் மெமரியைக் கொண்டுள்ளது. மேலும், 128 ஜிபி வரை எஸ்டி கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். வைஃபை, ப்ளூ-டூத் 4.0 ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஆடியோ பிளேயர், 3500mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இந்த பேட்டரி, 8 - 9 மணி நேரம் வரை செயல்படும்.

இந்த ஆடியோ பிளேயரின் இயங்குதளம் இரண்டு மோட்களில் செயல்படுகின்றன. ஒன்று, வழக்கமான ஆண்ட்ராய்டு மோட் மற்றொன்று ‘Pure மியூசிக்’ மோட். 32-பிட்-384KHz ஆடியோ வடிவங்களை தவிர, dsd, dxd, Apple Lossless, aiff, flac, wav, wma, mp3, aac, wma மற்றும் ogg போன்ற ஆடியோ வடிவங்களையும் இந்த ஆடியோ பிளேயரில் பயன்படுத்தலாம். இதில் பயன்படுத்தப்படும் ESS டெக்னாலஜி ES9018S டிஜிட்டல் - அனலாக் மாற்றி (DAC), உலகத்தின் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றாகும்.

இந்த ஆடியோ பிளேயரின் இந்திய விலை ரூ.42,299.

பிளஸ்:

* டிசைன் மற்றும் தரம்.
* DAC.
* டச் ஸ்க்ரீன்.
* ஒலியின் தரம்.
* அனைத்து ஒலி வடிவங்களையும் பயன்படுத்தலாம்.

மைனஸ்:

* சுமாரான பேட்டரி.
* அதிக எடை.
* அதிக விலை.


Link:
http://www.vikatan.com/nanayamvikatan/2016-mar-13/recent-news/116682-gadgets.art

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives