Sunday 28 February 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan

அசூஸ் GL552JX லேப்டாப் (Asus GL552JX Laptop)

அசூஸ் நிறுவனத்தின் ரிபப்ளிக் ஆஃப் கேமர்ஸ் (ROG) கேமிங் லேப்டாப் வரிசையின் புதிய மாடல்தான் இந்த GL552JX. பழைய R510J கேமிங் லேப்டாப்பைவிட பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்த மாடலில் அடங்கும். 
ஸ்டைலான ஸ்டார்ட்ஸ் லுக்கில் வரும் இந்த லேப்டாப் தரமான பிளாஸ்டிக், மெட்டல் மற்றும் ரப்பரைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 15.6 இன்ச் ஃபுல் ஹைடெஃபனிஷன் ஆன்ட்டி-க்ளேர் (anti-glare) டிஸ்ப்ளே அனைத்து விதமான வெளிச்சத்திலும் சிறப்பாக செயலாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள கீ-போர்ட் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த கீ-போர்ட் சிகப்பு நிற பேக்லைட் வசதி கொண்டது. இந்த பேக்லைட் வெளிச்சத்தின் அளவை வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இந்த லேப்டாப்பின் கீ-போர்டுக்கு மேல் ஸ்பீக்கர் அமைந்துள்ளது.

இந்த லேப்டாப் இன்டெல் கோர் i7-4750HQ 2GHz பிராசஸர் மட்டும் 8ஜிபி DDR3 ரேமைக் கொண்டு செயல்படுகிறது. இந்த பிராசஸர், 3.2GHz டர்போ ஃப்ரீகுவென்ஸி மற்றும் ஹைப்பர் த்ரட்டிங் தன்மையைக் கொண்டுள்ளது. 1TB 2.5 இன்ச் ஹார்ட்-டிஸ்க் ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த லேப்டாப் Nvidia GeForce GTX 950M கிராபிக் கார்டைக் கொண்டுள்ளது. 

இந்த லேப்டாப்பின் 4-செல் 48WHr பேட்டரி, வெறும் 1 மணி நேரம் வரைதான் நீடிக்கிறது என்பது பெரிய மைனஸாக அமைகிறது. விண்டோஸ் 10 ஹோம் 64-பிட் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த கேமிங் லேப்டாப்பின் இந்திய விலை ரூ.80,990.
பிளஸ்:

* ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் தரம்

*1080p Anti-glare டிஸ்ப்ளே
* சிறப்பான செயல்திறன்

மைனஸ்:


*  பேட்டரி 
* 2.6 கிலோ எடையுள்ள இந்த லேப்டாப்பை எளிதில் எடுத்துச் செல்ல முடியாது.

ஜியோனி எஸ்6 (Gionee S6)

ஜியோனி நிறுவனம் தனது ‘ஈலைப் எஸ்’ (Elife S) பிரிவு ஸ்மார்ட் போன்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், அந்த வகையில் வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்தான் இந்த ஜியோனி எஸ்6.

பிரீமியம் லுக்கைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. ஜியோனி நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைனான Amigo 3.1 ஸ்கின்னும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.
இந்த ஸ்மார்ட் போன், Octa-core MediaTek MT6753T 1.3GHz SoC பிராசஸர் மற்றும் 3ஜிபி ரேமைக் கொண்டு செயல்படுகிறது. 32 ஜிபி இன்டர்னெல் மெமரியைப் பெற்றுள்ளது. மேலும், 128ஜிபி வரை எஸ்டி கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5.5 இன்ச் 720 x 1280 பிக்ஸல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 3150 mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. 

இந்த பேட்டரி, சராசரி பயன்பாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் வரை தாங்குகிறது. டூயல் சிம் வசதி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், (சிம் 1 - மைக்ரோ சிம், சிம் 2 - நானோ சிம்) 4ஜி எல்.டி.இ. தொழில்நுட்பங்களான Band 40 மற்றும் VoLTE ஆகிய இரண்டிலும் இயங்கும். இந்த ஸ்மார்ட் போனின் 13 மெகா பிக்ஸல் பின்புற கேமரா பகல் வெளிச்சத்தில் தெளிவான படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.

இந்த ஸ்மார்ட் போனின் இந்திய விலை ரூ.19,999.
பிளஸ்:

* போனின் தரம் மற்றும் டிசைன்.
* பேட்டரி.
* 4G (Band40 மற்றும் VoLTE )சப்போர்ட் 

மைனஸ்:

* NFC வசதி கிடையாது.
* டிஸ்ப்ளே.
* விலை.


Link:
http://www.vikatan.com/nanayamvikatan/2016-03-06/recent-news/116385-gadget-scan.art

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives