Sunday 20 March 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan

ரெட்மி நோட் 3 (Redmi Note 3)

குறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள ஷியோமி நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட் போனான ரெட்மி நோட் 3-ஐ சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு பலத்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் டிசைனில் எந்தவித குறையுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த போன் சரிபாதி அளவு மெட்டலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘Matte’ பினிஷும் அடங்கும்.
1.4 GHz ஹெக்ஸா-கோர் Qualcomm Snapdragon 605 SoC பிராசஸர் கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு மாடல்களில் வருகின்றன. 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி. மற்றொன்று, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி .
மேலும், 32 ஜிபி வரை மைக்ரோ SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5.50 இன்ச் 1080x1920 பிக்ஸல் 403 PPI டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 4050 எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது.  ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போனில் ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைனான MIUI 7 இந்த ஸ்மார்ட் போனிலும் அடங்கும். டூயல் சிம் எல்டிஇ (LTE) வசதி கொண்டுள்ள இந்த ரெட்மி நோட் 3, ஐந்து விரல் ரேகைகள் வரை ஸ்டோர் செய்துகொள்ளும் ‘Finger Print’ சென்சார், 16 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவை கொண்டுள்ளது.
விலை:

2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.9,999

3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.11,999

பிளஸ்:

டிசைன்
டிஸ்ப்ளே
தொழில்நுட்பம்
பேட்டரி

மைனஸ்:


NFC வசதி கிடையாது 32 ஜிபி வரைதான் SD கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்த முடியும்
சுமாரான கேமரா

அசூஸ் விவா வாட்ச் (Asus VivoWatch)

உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரிக்க ஃபிட்னெஸ் கேட்ஜெட்களின் பயன்பாடும் அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் அசூஸ் நிறுவனம் தனது புதிய ஃபிட்னெஸ் ஸ்மார்ட் வாட்சான அசூஸ் விவோ வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. 

பார்ப்பதற்கு அசூஸ் ஜென் வாட்ச் 2  போல தோற்றமளிக்கும் இந்த விவோ வாட்ச், ஒரே ஒரு பட்டனை தனது வலது பக்கத்தில் கொண்டுள்ளது. இந்த பட்டன், வாட்ச்சை ஆன்/ஆப் செய்யப் பயன்படுகிறது. IP67 ‘Water Resistant’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த விவோ வாட்ச்சை, மைக்ரோ-USB கேபிள் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
எப்போதும் ஆனில் இருக்கும் ‘monochrome’ டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த விவோ வாட்சின் ‘backlight’-ஐ பயன்படுத்த வலது பக்கத்தில் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும். 

இந்த வாட்சின் டிஸ்ப்ளேவை முழு பகல் வெளிச்சத்திலும் தெளிவாக பார்க்கலாம். பத்து நாட்கள் வரை இந்த வாட்சின் பேட்டரி உழைக்கும் என்று அசூஸ் நிறுவனம் சொன்னாலும், ஐந்து நாட்கள் வரைதான் இந்த வாட்ச் பேட்டரியில் உழைக்கிறது.

இந்த ஃபிட்னெஸ் ஸ்மார்ட் வாட்சை ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் கேட்ஜெட்களோடு இணைக்க இதன் பிரத்யேக ‘Companion’ அப்ளிகேஷனான ‘HiVivo’வை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். கூகுள் Fit அல்லது ஆப்பிள் ஹெல்த்-கிட் அப்ளிகேஷன்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

ஹார்ட்-ரேட்டை அளவிட ஹார்ட்-ரேட் சென்சார், நடக்கும் தூரத்தை அளவிட ‘pedometer’, UV இன்டெக்ஸ், கலோரியின் பயன்பாடு, அலாரம், மெசேஜ் மற்றும் கால் நோட்டிபிகேஷன் போன்ற பயன்பாடுகளை கொண்டுள்ள இந்த ஃபிட்னெஸ் ஸ்மார்ட் வாட்சின் இந்திய விலை ரூ.11,499.

பிளஸ்:

லுக்
பேட்டரி

மைனஸ்:

ஸ்மார்ட் வாட்ச்சுக்கான அனைத்து செயல்பாடுகளும் இல்லை. மற்றும் ஃபிட்னெஸ் பேண்ட்டுக்கான அனைத்து செயல்பாடுகளும் இதில் இல்லை. 

Link:
http://www.vikatan.com/nanayamvikatan/2016-mar-27/recent-news/117194-gadgets.art

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives