Sunday 21 February 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan

ப்ளாக்பெர்ரி ப்ரிவ் (BlackBerry Priv)

ஒரு காலத்தில் ஸ்மார்ட் போன் உலகில் பெரும் பெயர் பெற்ற ப்ளாக்பெர்ரி நிறுவனம், பிற்பாடு அந்தப் பெயரை இழந்தது. இழந்த பெயரை மீட்டெடுக்க, பல புதுமையான உத்திகளை தனது தயாரிப்புகளில் அறிமுகம் செய்து வருகிறது. தற்போது ‘ப்ளாக்பெர்ரி ப்ரிவ்’ என்ற புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. 

இது ஒரு ஸ்லைடர் (Slider) ஸ்மார்ட் போன். அதாவது, இதில் ஒரு ஸ்லைடர் கீ போர்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் டச் ஸ்க்ரீன் கீ போர்டு அல்லது இந்த ஸ்லைடர் கீ-போர்டை தங்களது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் போன், இந்த ஜெனரேஷனின் பிரசித்தி பெற்ற இயங்குதளமான ஆண்ட்ராய்டு 5.1.1-யை கொண்டு இயங்குகிறது.
ஆறு சிபியு (CPU) கோர்களை கொண்டுள்ள Qualcomm Snapdragon 808 பிராஸசர் மற்றும் 3ஜிபி ரேமைக் கொண்டு செயல்படுகிறது இந்த ஸ்மார்ட் போன். 32 ஜிபி  இன்டர்னெல் மெமரியை பெற்றுள்ளது. மேலும், 2டிபி வரை மைக்ரோ SDXC கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5.43 இன்ச் 1440x2560 பிக்ஸல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 3410 எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. சிங்கிள் சிம் எல்டிஇ (LTE), என்எஃப்சி (NFC), ஜிபிஎஸ், டூயல் பேண்ட் வைஃபை (Dual-band WiFi) போன்றவற்றை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் க்விக் சார்ஜ் (Quick Charge) 2.0 தொழில்நுட்பமும் அடங்கும்.

18 மெகா பிக்ஸல் பின்புற கேமரா, 4K@30fps வீடியோ எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

2 மெகா பிக்ஸல் முன்புற கேமரா சுமாரான தரம் கொண்டது.

இந்த ஸ்மார்ட் போனின் இந்திய விலை ரூ.62,990.

பிளஸ்:

ஸ்லைடர் கீ போர்டு  இயங்குதள மாற்றங்கள்

வடிவமைப்பின் தரம்  டிஸ்ப்ளே.

மைனஸ்:


விலை  முன்புற கேமரா  கொடுக்கப்படும் சார்ஜர் க்விக் (Quick) சார்ஜர் கிடையாது.

ஜே பேர்டு எக்ஸ்2 ஹெட்போன்: (Jaybird X2)

ப்ளூ-டூத் வயர்லெஸ் ஹெட்போன்களின் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், ஹெட்போன் மார்க்கெட்டில் ஒரு நல்ல இடத்தில் வசிக்கும் ஜே பேர்டு நிறுவனம் தனது புதிய ஹெட்போனான எக்ஸ்2வை அறிமுகம் செய்தது.

X2 ஒரு ‘In-ear’ ஹெட்போன். இதன் இயர்-பட்கள் (Ear Bud) குறுகிய தட்டையான கேபிள் கொண்டு காதுகளுக்கு பின்புறம் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஹெட்போனின் கேபிள்கள் சிக்கிக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்கிறது. 
வலது இயர்-பட்டுக்கு அருகில் பிளாஸ்டிக்கால் ஆன In-line 3 பட்டன் ரிமோட் மற்றும் மைக்ரோபோன் அமைந்துள்ளது. இதைக்கொண்டு, ஹெட்போனின் பவர், ப்ளூடூத் இணைப்பு, ஒலியின் அளவு, கால்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

ஆறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஹெட்போன், 6 மி.மீ டைனமிக் ட்ரைவர்ஸ் (dynamic drivers), 16 ஒஹெச்எம் இம்பீடன்ஸ் (Ohm impedance) மற்றும் 103 டிபி சென்சிட்டிவிட்டியைக் (dB sensitivity) கொண்டுள்ளது. 20-20,000Hz அதிர்வெண் வரம்பை கொண்டுள்ள இந்த ஹெட்போன், ப்ளூடூத் 2.1-யை பெற்றுள்ளது. எட்டு ப்ளூடூத் இணைப்புகளை மெமரியில் வைத்துக்கொள்ளும் இந்த ஹெட்போனை, 10 மீட்டர் வரை தாராளமாக ப்ளூடூத் மூலம் பயன்படுத்தலாம்.

வலது இயர்-பட் கீழ் அமைந்துள்ள மைக்ரோ யுஎஸ்பி (USB) போர்ட் மூலம் இந்த ஹெட்போனை சார்ஜ் செய்யலாம். 100 எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஹெட்போன், ஏழு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

இதன் இந்திய விலை ரூ.15,999.

பிளஸ்:

டிசைன்

பேட்டரி

ஆடியோவின் தரம்.

மைனஸ்:

காதில் பொருந்தும் தன்மை

Bass மற்றும் Loud வகை ஒலியின் தரம்.

Link:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=116141

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives