Sunday 24 May 2015

கேட்ஜெட் | ஷியோமி எம்ஐ பேண்ட்(Xiaomi Mi Band)

ன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ‘ஹெல்த்’ சம்பந்தமான கேட்ஜெட்டுகள் ஏராளமாக வெளிவர தொடங்கியுள்ளன. அந்தவகையில் ஷியோமி நிறுவனம் ‘ஷியோமி எம்ஐ பேண்ட்’ என்னும் கேட்ஜெட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த பேண்டின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிசைன்!
இந்த பேண்ட் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று, பேண்ட். மற்றொன்று, ப்ளூ-டூத் கேப்சூல் (Bluetooth Capsule). இந்த கேட்ஜெட்டில் எந்த ஒரு ஸ்க்ரீனும் கிடையாது. ப்ளூ-டூத் கேப்சூலில் மட்டும் மூன்று எல்இடி   லைட்டுகள் உள்ளன. சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு என நான்கு வண்ணங்களில் ஒன்றை இந்த எல்இடி லைட்டாக செட் செய்துகொள்ளலாம். இந்த பேண்ட் தூசி மற்றும் மழையில் தாங்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனை அணியும்போது தோல் பிரச்னைகள் வராது என்று ஷியோமி நிறுவனம் உறுதியளித்துள்ளது. ப்ளூ-டூத் கேப்சூல் அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
பயன்கள்!
ஷியோமி எம்ஐ பேண்ட் நமது தூக்கத்தின் அளவை வகைப்படுத்திக் காண்பிக்கும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் மற்றும் எவ்வளவு கலோரி செலவாகிறது என தெளிவாகக் கணக்கிட்டுக் காண்பிக்கிறது. இதைத் தவிர, இந்த பேண்ட் பக்கத்தில் இருக்கும்போது, அதோடு இணைக்கப்படுள்ள ஸ்மார்ட் போனை பாஸ்வேர்டு இல்லாமல் ஓப்பன் செய்யலாம்.  அலாரம் மற்றும் போன் கால்களுக்கு இந்த கேட்ஜெட் வைப்ரேட் ஆகும்.
பயன்படுத்தும் முறை!
இந்த பேண்ட்-ஐ பயன்படுத்த கண்டிப்பாக ஸ்மார்ட் போனில் ‘Mi Fit’ அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்துக்கு கிடைக்கிறது. மற்றும் ப்ளூ-டூத் 4.0 ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டும். இந்த கேட்ஜெட்டை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷன்களிலும், ஐஓஎஸ் 7.0 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷன்களிலும் மட்டுமே பயன்படுத்த முடியும்.
பேட்டரி!
இது 41mAh ‘Lithium Polymer’ பேட்டரியைக் கொண்டது. 8 மி.மீ அடர்த்தி உள்ள இந்த பேட்டரி 30 நாட்கள் வரை உழைக்கக்கூடும்.
அளவு!
இந்த பேண்ட் 36 மி.மீ நீளமும் 14 மி.மீ அகலமும் 9 மி.மீ அடர்த்தியும் கொண்டது. 5 கிராம் அளவுக்கும் குறைவான எடையைக் கொண்டுள்ள இந்த கேட்ஜெட், ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. பேண்டின் அளவை வாடிக்கையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப 157 மி.மீ முதல் 205 மி.மீ வரை அட்ஜஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
விலை!
இந்த பேண்ட் 999 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.
பிளஸ்: விலை, சிறந்த தொழில்நுட்பம், பேட்டரி
மைனஸ்: ஸ்க்ரீன் கிடையாது, குறைந்த சேவைகள்

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives