Sunday 17 May 2015

கேட்ஜெட்ஸ் | ஹுவாய் ஹானர் 4C(Huawei Honor 4C)

மீபகாலமாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்களின் மார்க்கெட் பலத்த போட்டியுடன் காணப்படுகிறது. இந்த நிலையில் ஷியோமி, லெனோவோ, அசூஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிய ஹேன்ட் செட்களைக் குறுகிய காலத்தில் வெளியிட்டு, தங்களது மார்க்கெட்டை தக்கவைத்து வருகின்றன. ஹுவாய் நிறுவனமும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில், ஹுவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘ஹுவாய் ஹானர் 4C’ என்ற ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

1. டிசைன்!
இந்த ஸ்மார்ட் போன் ஐரோப்பிய டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகக் காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட் போன் வெள்ளை மட்டும் கறுப்பு என இரண்டு நிறங்களில் வருகின்றன. கறுப்பு நிற மாடலைவிட வெள்ளை நிற மாடலே பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்கிறது. பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால், சராசரி பட்ஜெட் ஸ்மார்ட் போன்களைவிட இதன்  எடை அதிகம். (162 கிராம்)
2. டிஸ்ப்ளே!
இந்த ஸ்மார்ட் போன் 5 இன்ச் 720 x 1280 pixels (~294 ppi pixel density) 16M IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பிரகாசமாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது. ஆனால், சூரிய ஒளியில் பயன்படுத்தும்போது இந்த டிஸ்ப்ளே சற்று சுமாராகவே இருக்கிறது.
3. தொழில்நுட்பம்!
இந்த ஸ்மார்ட் போன் ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘Kirin’ பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த 64-பிட் 1.2GHz HiSilicon Kirin 620 பிராசஸர் மொத்தம் எட்டு Cortex-A53 கோர்களைக் கொண்டு செயல்படுகிறது. 2GB ரேமைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் இன்டர்னல் மெமரி 8GB. மேலும், இதை 32 GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
4. இயங்குதளம்!
இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் கிட்-கேட் 4.4.2 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. இதில் ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமாக EMUI 3.0 டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.
5. கேமரா!
இந்த ஸ்மார்ட் போன் 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இதில் சோனி நிறுவனத்தின் CMOS சென்ஸார் அடங்கும். Led பிளாஷ் வசதியைக் கொண்டுள்ள இந்த கேமராவில் எடுக்கப்படும் படங்கள் நன்றாக இருக்கின்றன. மேலும், 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். 2550 mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், டூயல் சிம் வசதிகளைக் கொண்டுள்ளது.
6. விலை!
Flipkart.com இணையதளத்தில்  ரூபாய் 8,999 என்ற விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
பிளஸ்:
இயங்குதளம்
பேட்டரி
மைனஸ்:
தொழில்நுட்பம்

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives