Sunday 31 May 2015

கேட்ஜெட்ஸ் | யூ யுபோரியா (Yu Yuphoria)

‘யூ’ என்பது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு பிரீமியம் பிராண்ட் இமேஜ்ஜை உருவாக்க யூ ஸ்மார்ட் போன் துணை நிறுவனத்தைத் தொடங்கியது. யூ நிறுவனத்தின் முதல் கேட்ஜெட் ‘யுரேகா’. குறைந்த விலையில் அதிகத் தொழில்நுட்பம் என்ற யுக்தியில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போன், பல எல்லைகளைத் தொட்டது. இதன் தொடர்ச்சியாக யூ நிறுவனம், தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான  ‘யுபோரியா’-வை சமீபத்தில் வெளியிட்டது.
டிசைன்!
யுபோரியா ஸ்மார்ட் போன் பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஓரங்கள் முழுவதும் மெட்டலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போனை கவர்ச்சியாகக் காட்சியளிக்க உதவுகிறது. பின்புற கேமராவைச் சுற்றி ஒரு பெரிய உலோக வளையம் அமைந்துள்ளது. இதுவும் போனின் டிசைனுக்குப் புதுமையைத் தருகிறது. யுபோரியா ‘Buffed Steel’ மற்றும் ‘Champagne Gold’ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனின் பரிமாணங்கள் 142.4x73x9.35 மி.மீ. எடை 143 கிராம்.
கேமரா!
யுபோரியா, 8MP பின்புற கேமராவையும் 5MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. பின்புற கேமரா சூரியவெளிச்சத்தில் கச்சிதமான படங்களை எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. முன்புற கேமரா தனது 4P லென்ஸ்களைக் கொண்டு சிறப்பான செல்ஃபிகளை எடுக்க உதவுகிறது. ஆனால், பின்புற கேமரா மூலம் எடுக்கப்படும் 720P வீடியோ சுமாராகவே இருக்கிறது.
டிஸ்ப்ளே!
யுபோரியா, 5 இன்ச் 720*1280 பிக்சல்ஸ் 294 PPI 16.7M டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட் போனில் இதுபோன்ற அதிக தொழில்நுட்ப டிஸ்ப்ளேக்கள் கிடைப்பதில்லை. மேலும், டிஸ்ப்ளேவின் பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’-யும் இதில் அமைந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே மிருதுவாக இருக்கிறது. ஆனால், வெளிச்சத்தில் பயன்படுத்த இந்த டிஸ்ப்ளே சுமாராகவே உள்ளது.
தொழில்நுட்பம்!
யுபோரியா, Qualcomm’s 1.2GHz quad-core Snapdragon 410 SoC பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், பிரத்யேகமான Adreno 306 கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 2GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் மெமரியை 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். டூயல் சிம் வசதிகளைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் ஒரு சிம் மட்டும் 4G LTE வசதியைக் கொண்டுள்ளது.
பேட்டரி!
யுபோரியா, 2230mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. அதிகப் பயன்பாட்டில் சுமார் 7.5 மணி நேரம் வரை உழைக்கும் இந்த பேட்டரி, வாடிக்கையாளர்களின் ஒருநாள் பயன்பாட்டுக்குப் போதுமானதாக இருக்கும்.
இயங்குதளம்!
இந்த போனின் சிறப்பம்சம், அதன் இயங்குதளம்தான். யுரேகா ஸ்மார்ட் போனை போலவே, யுபோரியா ஸ்மார்ட் போனிலும் ‘Cyanogen’ இயங்குதளமே பயன்படுத்தப்பட்டுள்ளது. Cyanogen இயங்குதளம் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யூபோரியாவில் அமைந்துள்ள ‘Cyanogen OS 12’ இயங்குதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப பல ஆப்ஷன்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி எந்த இயங்குதளத்திலும் கிடையாது.
யூ யுபோரியாவின் இந்திய விலை ரூபாய் 6,999.
பிளஸ்:  டிசைன்  ரேம்,  விலை
மைனஸ்:  பின்புற கேமரா,  சுமாரான செயல்பாடு.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives