Thursday 16 January 2014

'தொடரட்டும் உங்கள் சேவை' | Doctor Vikatan Camp | டாக்டர் விகடன்

நெகிழ்ந்த வாசக நெஞ்சங்கள்...

டாக்டர் விகடன் இலவச மருத்துவ முகாம்


ங்கள் நலனில் அக்கறைகொண்ட டாக்டர் விகடன், தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குச் சென்று, அந்தப் பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்திவருகிறது. அந்தவகையில், முதன்முறையாக ஆயுர்வேத மருத்துவமனையான ஆர்வீட்டாவுடன் இணைந்து, சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி மாபெரும் இலவச ஆயுர்வேத பொது மற்றும் எலும்பு மூட்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தியது.
முகாமில் 15 ஆயுர்வேத மருத்துவர்களும், 25 மருத்துவப் பணியாளர்களும் கலந்துகொண்டு, சுமார் 400 பேருக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, பி.எம்.ஐ. பரிசோதனைகள் செய்யப்பட்டன. எலும்பு மூட்டுப் பிரச்னையுடன் வந்த அனைவருக்கும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, சி.டி.யில் போட்டுக்கொடுக்கப்பட்டது. இதை டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர்கள் எலும்புமூட்டில் என்ன பிரச்னை என்று ஆய்வு செய்து அதற்கு ஏற்றபடி பரிந்துரை அளித்தனர். இதேபோல, தேவைப்படும் நபர்களுக்கு ஈ.சி.ஜி.யும் எடுக்கப்பட்டது.

முகாமில் ஏராளமான நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் கலந்துகொண்டனர். நடக்க முடியாத நிலையில் பலரும் வந்து பொறுமையுடன் டாக்டர்களிடம் காண்பித்து ஆலோசனை பெற்றுச்சென்றனர். மேலும், குழந்தைகள், பெண்களுக்கு என்று பிரத்யேக டாக்டர்கள் வந்திருந்து பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்துகொண்ட தாம்பரத்தைச் சேர்ந்த நசீர், 'எனக்கு 52 வயசாகுது. ரொம்ப நாளாவே காலில் மூட்டுவலி இருந்தது. சாதாரண வலின்னு விட்டுட்டேன். இந்த நேரத்துலதான், விகடனில் எலும்பு மூட்டு முகாம் சிகிச்சை பற்றிப் படிச்சதும் நேரா வந்துட்டேன். டாக்டர்கள் ரொம்பப் பொறுமையா என் பிரச்னையைக் கேட்டாங்க. எனக்கு மூட்டில் சவ்வுக் கிழிசல் ஆரம்பநிலையில் இருக்கிறதைக் கண்டுபிடிச்சுச் சொன்னாங்க. என்னை மாதிரியே நிறையப் பேருக்குப் பிரச்னை ஆரம்பநிலையில் இருக்கிறதைக் கண்டுபிடிச்சிருக்காங்க. டாக்டர் விகடனுக்கு ரொம்ப நன்றி,' என்றார்.
 - செ.கிஸோர் பிரசாத் கிரண், ஹெச்.ராசிக் ராஜா, ரெ.சு.வெங்கடேஷ், க.சுபராமன்
படங்கள்: ப.சரவணகுமார்,
க.பாலாஜி
எஸ்.சரஸ்வதி, அசோக்நகர்.
'ரொம்ப நாளா கழுத்திலும் இடுப்பிலும் எலும்பு வலி. தினசரி வேலையைக்கூட ஒழுங்கா செய்ய முடியலை. இதனால தூக்கமே இல்லாமத் தவிப்பேன். எங்க இந்த வலி நிரந்தரமா இருந்துடுமோங்கிற பயம் இருந்துச்சு. ஆனா இங்கு வந்து பார்த்ததுக்கப்புறம் பயம் குறைஞ்சிருக்கு. எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த டாக்டர், எதனால பிரச்னைனு விரிவா சொன்னாங்க. இதை முற்றிலும் குணமாக்கலாம்னு நம்பிக்கை கொடுத்திருக்காங்க. இந்த முகாமை எங்கள் பகுதியில் நடத்தியதுக்கு ரொம்ப நன்றி.'
லட்சுமி - பாக்கியம் சகோதரிகள், கோடம்பாக்கம்.
'எனக்கு 85 வயசு. ரிட்டையர்டு டீச்சர். இவ என் தங்கை லட்சுமி 83 வயசு. கை, கால், மூட்டு எல்லாமே அடிக்கடி வலிக்கிறது. வயோதிகம்தான் காரணமா இருக்கும்னு கண்டுக்காம விட்டுட்டோம். விகடன்ல விளம்பரத்தைப் பார்த்துட்டு இந்த முகாமுக்கு வந்தோம். எல்லா டெஸ்ட்டும் எடுத்தாங்க. என்ன பிரச்னைன்னு பொறுமையா விசாரிச்சு, என்ன செய்யணும்னு விரிவா ஆலோசனை சொன்னாங்க. மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்திருக்காங்க. இந்த முகாமுக்கு வந்ததிலேயே பாதி குணமாகிட்டமாதிரியான நம்பிக்கை வந்திருக்கு. இன்னும் டாக்டர்கள் சொன்னதுபோல நடந்தா, நிச்சயமா நலமா இருப்போம்னு நம்புறோம்' என்றார் பாக்கியம்.


Link:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=90771&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=9

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives