Tuesday 28 January 2014

'குருஷேத்ரா' - அறிவியல் முன்மாதிரிகள் | Kurukshetra CEG | Vikatan.com

மேலாண்மை திருவிழா  'குருஷேத்ரா' . இது சர்வதேச அளவில் நடைபெறும் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா.
 இந்த ஆண்டும் முழு வேகத்தில் பல புதுமையான சிறபம்சகளோடு வரும் ஜனவரி 29 தேதி 'குருஷேத்ரா’ தொடங்க இருக்கும் நிலையில், முதற்கட்டமாக  27/1/2014 அன்று தங்கள் ப்ராஜெக்ட்சை மாணவர்கள் காட்டினார்கள். பார்பதற்கு புதுமையாக தோற்றம் அளித்த இந்த ப்ராஜெக்ட்ஸ்,  பயன்பாட்டிலும் பல எல்லைகளை தாண்டியது. ஆம், தற்சமயத்தில் மனிதன் சமுதாயத்தில் போராடிக்கொண்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் வகையில் இந்த அறிவியல் முன்மாதிரிகள் இருந்தன.

சாக்கடைக் குழாயிலிருந்து சாக்கடையை தானே வெளியேற்றும் ரோபாட் கருவி மிகவும் புதுமையாக இருந்தது. இந்த ரோபாட் கருவியை கண்டுபிடித்துள்ள  மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரிகல்&எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மாணவர்கள் கூறியது, “ மனிதக் கழிவினை மனிதனே அல்லும் அவலம் இன்னும் நம் நாட்டில் நடமாட்டத்தில் தான் இருக்கிறது. இதனால் பல தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தோம். முயற்சியில் இறங்கினோம். பல மாதம் உழைப்புக்கு பின் இந்த ரோபாட் கருவியை கண்டுபிடித்தோம். மிக எளிமையாக கட்டுபடுத்தக்கூடிய இந்த ரோபாட் தயாரிக்க ஆகும் செலவு இருபதாயிரம் ரூபாய் தான். இந்த ரோபோட்டை உருவாக்க சென்னை கார்பரேஷன் எங்களுக்கு பல உதவிகளை செய்தது.”
இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள் மிகவும் புதுமையான ஒரு திட்டத்தை உருவாக்கி இருந்தனர். “ இந்தியாவில் கடற்கரைகள் அதிகம். ஆனால் இந்த கடற்கரைகளில் இருக்கும் கடைகள் சரியான வடிவைப்பு இல்லாமல் இருக்கின்றனர். இக்காரணத்தால் பெரும்பாலான கடற்கரைகள் பார்பதற்கு அழகாக காட்சி அளிப்பதில்லை. இதை சரி செய்ய ஒரு மாதிரி கடையை உருவாக்கி உள்ளோம். பார்பதற்கு அழகாகவும் கச்சிதமாகவும் காட்சி அளிக்கும் இந்த மாதிரிகளின் விலை வெறும் நாலாயிரம் ரூபாய் தான். இந்த மாதிரிகள் நடைமுறைக்கு வந்தால் கடற்கரை அழகு அதிகரிப்பதோடு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்”, என்றனர்.


காரில் விபத்துகள் ஏற்பட்டால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பயணிகளை காப்பாற்ற ஒரு புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ள இரண்டாம் ஆண்டு இ.சி.இ மாணவர்கள் சொல்லியது, “ தமிழ்நாட்டில் மட்டும் தினமும் 44 பேர் விபத்தினால் இறக்கிறார்கள். விபத்தால் இறக்கும் எண்ணிகையை பார்க்கும்போது இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தை வகிக்கிறது. ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் விபத்தான பகுதிக்கு வரமுடியாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதை குறைக்கும் எண்ணத்தில் தான் இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளோம். விபத்து அமைந்த அடுத்த நொடியே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு இந்த கருவி ஒரு அலெர்ட் மெசேஜ்யை அனுப்பிவிடும். கூடவே ஜி.பி.எஸ். கருவியும் இந்த சாதனத்தோடு பொருத்தப்பட்டிருப்பதால் விபத்து ஏற்பட்ட இடமும் துள்ளியமாக இந்த மெசேஜோடு அனுப்பப்படும். இதை வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானவர்களை மிக விரைவில் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து சென்று உயிரை காப்பாற்ற முடியும்”, என்றனர்.
மேலும் திருட்டு ஏற்பட்டால் அதை எச்சரிக்கும் கருவி, மாணவர்களின் முழு விபரத்தை சேமித்து வைத்துகொள்ளும் தகவல் முன்வாயில், கம்ப்யூட்டர் ரெஜிஸ்டரை சரி செய்யும் கருவியும் இந்த காட்சியில் இடம் பெற்றது.


இந்த ப்ராஜெக்ட்ஸ் காட்சியை தொடங்கி வைத்த கிண்டி பொறியியல் கல்லூரியின் டீன் டாக்டர்.சி.செல்லப்பன் பேசியது, “ மாணவர்களுக்கு புத்தக அறிவு மட்டும் போதாது. படித்த கல்வியை நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்துவதே கல்வியின் நோக்கம். அந்த நோக்கத்தை அடையும் பொருட்டு, கிண்டி பொறியியல் கல்லூரி 'குருஷேத்ரா' என்னும் சர்வதேச தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த திருவிழாவில் மாணவர்கள் தங்கள் ஒப்பற்ற திறமையை காட்ட இருக்கிறார்கள். அதற்கு முதற்படி தான் இந்த ப்ராஜெக்ட்ஸ் காட்சி. இது போன்ற புதுமையான முயற்சிகளுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி என்றுமே தன் ஆதரவை தரும்”, என்றார்.
     'குருஷேத்ரா' திருவிழா மாணவர்களின் அறிவுப்புதையலை அரங்கேற்ற மிகப்பெரிய தளமாக அமையும்!

 மேலும் விவரங்களுக்கு... http://kurukshetra.org.in/

-செ.கிஸோர் பிரசாத் கிரண்.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives