Thursday 30 January 2014

குருஷேத்ரா தொடக்க விழா - அறிவுக்கான போர் | Kurukshetra - CEG | Vikatan.com

கிண்டி பொறியியல் கல்லூரியின் “குருஷேத்ரா” திருவிழா ஜனவரி 29, புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு சிறப்பாக தொடங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜாராம் மற்றும் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சிவதாணுப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சிவதாணு பிள்ளை, “ குருஷேத்ரா என்பது ஒரு போர். அறிவுக்கான போர். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாணவர்களால் நடத்தப்படும் ஒரே திருவிழா குருஷேத்ரா தான்.  எடிசனை போல மேரி க்யூரி போல மாணவர்கள் விடாமுயற்சியோடு அறிவின் பாதையில் பயணிக்க வேண்டும்.


 இந்தியர்கள் தான் அறிவியலில் சிறந்தவர்கள். எதிர் விசையை நியூட்டன் கண்டுபிடித்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் 500 ஆண்டுகள் நியூட்டனுக்கு முன்னரே நம் இந்தியர்கள் எதிர்விசையை கண்டுபிடித்துவிட்டார்கள். இந்தியர்கள் தான் அறிவியலின் முன்மாதிரி என்றே கூறலாம். பித்தளை முதலிய உலோகங்களை கண்டுபிடித்தவர்களும் இந்தியர்கள் தான். பலாயிரம் ஆண்டகளுக்கு முன்னரே ஐந்து கலவையால் ஆனா சிதம்பரம் நடராஜர் சிலை, நம் முன்னோர்களின் அறிவியில் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பிரமோஸ் நிறுவனம் நம் நாட்டுக்கு தேவையான பல ராணுவ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. பல வகையான ஆயுதங்களையும் போர் கால தாக்குதல் முறைக்கான தொழில்நுட்பத்தையும் பல கோணங்களில் வளர்த்து வருகிறது. வளர்ச்சி பாதையில் நகர்ந்துக்கொண்டிருக்கும் பிரமோஸ் நிறுவனம் தற்போது எந்த தொழில்நுட்பத்தாலும் கண்டுபிடிக்க இயலாத ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் மும்மரமாக இடுபட்டிருகிறது.”, என்றார்.
3டி பிரிண்டிங் வொர்க் ஷாப் மற்றும் ரோபோடிக் வொர்க் ஷாப் குருஷேத்ராவின் முதல் நாளில் நடத்தப்பட்டன. பல மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை உபயோகப்படுத்திக்கொண்டனர். மேலும் பைக் ஸ்டன்ட் ஷோ, உலகப்புகழ் பெற்ற மேஜிக் நிருபரான ஸ்டீபன் எபின்கரின் மேஜிக் நிகழ்ச்சி என்று குருஷேத்ரா விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது.

பின்பு டாக்டர் சிவதாணுப்பிள்ளை, தேசிய பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் கண்காட்சி மற்றும் ஒலிம்பிக் விளையாட்டின் புகைப்படக்காரரான சுகுமாரின் புகைப்படக்கண்காட்சியை தொடங்கிவைத்தார். இந்த இரு கண்காட்சிகளும், குருஷேத்ராவின் மூன்று நாட்களிலும் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்படும். இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜாராம், கிண்டி பொறியியல் கல்லூரின் டீன் டாக்டர் செல்லப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 தேதிகளில் நடக்க இருக்கும் ‘குருஷேத்ரா’ தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா பல எல்லைகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்நாள் விழாவின் புகைப்படத்தொகுப்பு உங்களுக்காக
 மேலும் விபரங்களுக்குhttp://kurukshetra.org.in/.

செ.கிஸோர் பிரசாத் கிரண்(Student Reporter), சென்னை
புகைபடங்கள்: குமரகுருபரன்.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives