Friday 31 January 2014

குருக்ஷேத்ரா- அட்டகாச 3டி ஓவியங்கள் | Kurukshetra - CEG | Vikatan.com

காலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குருக்ஷேத்ரா நிகழ்சிக்காக பதிவு செய்தார்கள். பதிவு செய்ய செய்ய கூட்டம் கூடிக்கொண்டே தான் இருந்தது.கிண்டி பொறியியல் கல்லூரியின் ‘குருக்ஷேத்ரா’ என்னும் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கிறது.

பின்பு ஓவியர்கள் தங்கள் 3டி ஓவியங்களை தரையில் ஒட்டி பல மாணவர்களை அதிசயத்தில் ஆழ்த்தினர். ஒரு கோணத்தில் இருந்து பார்பதற்கு அச்சு அசலாக உண்மையான உருவங்களை போல காட்சியளித்தது இந்த 3டி ஓவியங்கள். மாணவர்கள் பலர் இந்த 3டி ஓவியத்தோடு நின்று பல படங்களை எடுத்துக்கொண்டனர்.


இதன்பிறகு போட்டிகள் ஒவ்வொன்றாக தொடங்கின. எளிய விமானங்களை உருவாக்கும் போட்டி பல மாணவர்களை கவர்ந்தது. ‘பில்ட் இட் வித் பேக்கர்’ கட்டிட தொழில்முறை புதுமையாக இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிக்கு தேவையான ஒரு ‘WIFI’ ஹாட்ஸ்போட்டை கட்டினார்கள்.
மொபைல் கோளரங்கம் அனைவரையும் கவர்ந்தது. சூரிய குடும்பத்தை விளக்கும் இந்த கோளரங்கத்தை மாணவர்கள் பலர் கண்டுகளித்தனர். இதை தவிர மாணவர்களின் கணிதம் மற்றும் காமன்சென்ஸை டெஸ்ட் செய்யும் ‘அல்கட்ராஸ்’ போட்டிக்கு பலத்த வரவேற்ப்பு இருந்தது. கிட்டத்தட்ட 140 டீம்கள் இந்த போட்டியில் கலந்துக்கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்.

மாணவர்களின் அறிவுத்திறனை சோதனை செய்யும் வினாடி-வினா, மேலாண்மை திறனை வளர்க்கும் வகுப்புகள், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்களை திருத்தும் போட்டி, என மாணவர்களின் அறிவுக்கு சிறந்த தளமாகவே அமைந்து வருகிறது குருக்ஷேத்ரா.
பல்வேறு வகையான புதுமையான போட்டிகள் இன்றும் நாளையும் மாணவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.
-    செ.கிஸோர் பிரசாத் கிரண்(Student Reporter), சென்னை
-    படங்கள்: குமரகுருபரன்.

Link:
http://www.vikatan.com/article.php?module=news&aid=24000&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=8

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives