Saturday 1 February 2014

குருக்ஷேத்ரா- ‘நியூஜென்’ தொழில்முறை வகுப்புகள் | Kurukshetra - CEG | Vikatan.com


பல எல்லைகளை தொட்டுக்கொண்டிருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியின்  ‘குருக்ஷேத்ரா’ என்னும் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா, ஜனவரி 30ஆம் தேதி ஒரு ஆச்சரியமான நிகழ்வை சந்தித்தது.

ஆம். பிரபல திரைப்பட நடிகர் நாசர் அவர்கள், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ‘குருக்ஷேத்ரா’வின் ‘பில்ட் இட் வித் பேக்கர்’ என்னும் கட்டிட தொழில்முறையை காண வந்திருந்தார். அதை பார்வையிட்டு, மாணவர்களோடு உரையாடி பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். கல்லூரியின் பல இடங்களுக்கு நடந்தே சென்று ‘குருக்ஷேத்ரா’வின் நிகழ்சிகளை பார்வையிட்டார்.
     மூன்றாம் நாளான ஜனவரி 30ஆம் தேதியில் கம்ப்யூட்டர் வீடியோ பார்மேட்டின் ஒரு வகையான ‘MPEG’ஐ கண்டுபிடித்த லியானர்டோ சியாலிக்ரியோன் மாணவர்களுக்கு தன் கண்டுபிடிப்பின்னை பற்றி விளக்கமாய் ஒரு வகுப்பெடுத்தார். இது மாணவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பாக அமைந்தது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டறிந்தனர்.

‘குருக்ஷேத்ரா’வின் மிகவும் எதிர்பாக்கப்பட்ட ‘GODSPEED’ போட்டியும் வெள்ளிட்கிழமை தொடங்கியது. மாணவர்கள் பலர் தங்கள் மினி கார்களை எடுத்துக்கொண்டு உற்சாகமாக இந்த போட்டியில் கலந்துக்கொண்டனர். நெருப்பை போல ஒவ்வொரு மினி கார்களும் நிலத்தில் சீண்டின. ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்யப்படும் இந்த கார்களின் விலை சுமார் ஐம்பதாயிரம் என்கின்றனர் இந்த மினி கார்களின் உரிமையாளர்கள். இந்த போட்டியை பற்றி இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, பிரதீப் மற்றும் பிரசாத்திடம் கேட்டதில், “ மிகவும் விறு விருப்பாக நடந்துக்கொண்டிருக்கும் இந்த போட்டியில், போட்டியாளர்களுக்கு பல சவால்களை தந்துள்ளோம். வெற்றி பெரும் போட்டியாளர்களுக்கு பெரும் தொகை ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.’, என்றார்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘நியூஜென்’ தொழில்முறை வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெற்றது. அணுசக்தியை வைத்துக்கொண்டு நடைமுறைக்கும் தொழில்முறைகளுக்கும் தேவைப்படும் சக்தியை பூர்த்தி செய்யும் முறையை சொல்லி தரும் இந்த வகுப்பு, மாணவர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இதை ஏற்பாடு செய்திருந்த முஹம்மது இம்தியாஸ், ரஞ்சித், இளங்கோவன் மற்றும் விக்னேஷ் குமார் சொல்லியது, “இது போன்ற தொழில் முறை வகுப்புகள் நடப்பது இதுவே முதல் முறை. பங்குபெற்றவர்களுக்கு அணுசக்தியன் இயல்பை பற்றியும் அணுசக்தியைக் கொண்டு மின்சாரத்தை தயாரிக்கும் முறையை பற்றியும் ஒரு பெரும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தெளிவூட்டுவதர்காக கல்பாக்கத்தில் உள்ள IGCARக்கு மாணவர்களை அழைத்து சென்று நேரடியாக வகுப்புகளை நடத்தினோம். இதனால் இந்த வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவர்கள் அணுசக்தியில் உள்ள தங்கள் அறிவினை வளர்க்க இது ஒரு வாய்பாக அமைந்தது.”, என்றார்கள்.

     புகழ்பெற்ற ஹிக்ஸ் போஸ்ஸான் ஆராய்ச்சியின் விஞ்ஞானியான அர்ச்சனா ஷர்மா மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார். மேலும் மிக மலிய விலையான ‘ஆகாஷ்’ டாப்லெட்டை கண்டுபிடித்த சுனீத் சிங்க் துளியும் மாணவர்களோடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார்.
     இதை தவிர மேலாண்மை போட்டி, ரோபோவார்ஸ் போட்டி, கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் போட்டி என பலவகையான போட்டிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. மேலும் ஒருநாள் நடைபெற இருக்கும் இந்த ‘குருக்ஷேத்ரா’ திருவிழா அறிவுசார்ந்த பல வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-    செ.கிஸோர் பிரசாத் கிரண்(Student Reporter), சென்னை


-    படங்கள்: குமரகுருபரன்.

Link:
http://www.vikatan.com/article.php?module=news&aid=24053&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=8

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives