Sunday 5 February 2012

Manmadha Raja | மன்மத ராஜா

எதிர்பாராத முதல் முத்தம்:
இன்று அநாதை விடுதி ஒன்றிற்குச் சென்றிருந்தோம்.முடிந்த வரை நான் குழந்தைகளிடம் அன்பாக இருக்க முயற்சித்தேன்.குழந்தைகள் தங்கள் கள்ள கபடமற்ற அன்பை எங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். இது சற்று வேடிக்கையான விஷயமாக எனக்குத் தென்பட்டது.ஏனெனில்,இது போன்ற நிகழ்வுகளை நான் முதன்முதலில் என் வாழ்கையில் சந்திக்கிறேன்.
நண்பகல் உணவு உண்பதற்கு முன், தூரத்தில் ஒரு சிறுவன் என்னை அழைத்தான்.
அவனோடு காலை வேளையில் தான் ஒரு விளையாட்டை விளையாடினேன் என்று அவனை நோக்கிச் செல்லும்போது எனக்குத் தெரிந்துவிட்டது.அவனிடம் சென்ற பின்பு,அவன் தன் அருகில் வருமாறு என்னை அழைத்தான்.அவன், பிற குழந்தைகள் போல என் கல்லூரி ID'ஐ பார்க்கப் போகிறான் என்று நினைத்தேன்.
ஆனால், நான் நினைத்ததற்கு மாறாக, அவன் தன் இரு கைகளை என் தோழின்மீது பற்றி, தன் எச்சில் நிறைந்த உதடுகளை என் கன்னத்தில் மீது பதித்தான்.அந்த நொடி, என் உணர்ச்சி கிணறுகள் வற்றிப்போயின.
ஒரு குழு சேர்ந்து, சில நிகழ்சிகளை நடத்தி, அதன் பயனாய் சிறுவர்களின் முகத்தில் நாங்கள் கண்ட ஆனந்தத்தை விமர்சிக்க ஒரு புது மொழியைத் தான் உருவாக்க வேண்டும் போலும்.நிறைய
சிறுவர்கள், அவர்களிடம் இருந்த வேறுபாடுகள், தாக்கங்கள்,உணர்வுகள்,அனுபவங்கள்.....இவை அனைத்தும் எனக்குப் புதுமையாக இருந்தன.
இந்நாளை உணரும் போது,
my mind was mesmerising with Lee Iacocca's statement "The affections are like lightning.You cannot tell where they will strike till they have fallen."
இவை அனைத்தும் எனக்கு ஆறுதலாக இருந்தாலும், நான் அந்த விடுதியின் வாசலை அடையும் போது ஒரு சிறுவன் சொன்ன வார்த்தைகள் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.அவை,"அண்ணா,நீங்க மறுபிடியும் வருவீங்களா?நிஜமா??!"

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives