Friday 13 January 2012

Madhya Kailash | மத்திய கைலாஷ்

இன்று காலை மத்திய கைலாஷ் பறக்கும் ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்த தருணம்.ஒரு 40 வயது பெரியவர் என்னிடம் வந்து,தன் Wallet தொலைந்து விட்டதாக கூறி,28 ரூபாய் பணம் கேட்டார்.அந்நேரத்தில் வந்த ரயிலை விட்டால்,நான் என் ஊருக்கான ரயில் வண்டியை பிடிக்க இயலாது.மேலும் சரியாக என்னிடம் 28 ருபாய் சில்லறை அந்நேரத்தில் இல்லை.அவர் உண்மையானவரா அல்லது பொய்யானவரா என்று கூட எனக்குத் தெரியாது.அதனால்,என்னால் அந்த மனிதனுக்கு உதவி செய்ய இயலவில்லை.
நான் சென்னையிலிருந்து வரும்போது,ஒரு 80 வயது நிரம்பிய பெரியவருக்கு எவரும் உட்கார இடம் கொடுக்கவில்லை.நான் இடம் கொடுத்தேன்.நான் காலையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுக்கு,ஒரு நன்மை செய்து விட்டேன் என்று தோன்றியது.மனம் குளிர்ந்தது.நான் என் தவறை ஒரு புறம் நியாயப்படுதிக்கொண்டாலும்,என் உள்மனதின் ஆழ்ந்தக்குரல் இன்னும்,"நீ தவறு செய்து விட்டாய்",என்று ஒலிக்கிறது.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives