Sunday 14 October 2018

96 படம் - எனது அனுபவம்.


96 படம் திரையரங்குகளுக்கு வரும் முன்பு, அதன் டீஸர் மற்றும் டிரைலரை வைத்து நான் எழுதிய பதிவைப் படிக்க - https://bit.ly/2S3npT1 

1. "9 to 6 ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கக் கூடாது, Chat பண்ணக் கூடாது, Whatsapp'ல வரக்கூடாது", என்று கூறும் அதே ராம் தான் இந்த நிபந்தனையைத் தனது 1'9' to 3'6' வயது வரை பின்பற்றிக் கொண்டிருக்கிறார். ராமின் வயது இப்போது 37.

2. 96 படம், ராமின் முடிவைப் பற்றிப் பேசவில்லை. அவரது புதிய தொடக்கத்தைப் பேசுகிறது.

3. ராமும் பிரபாவும் (Varsha Bollamma) காதல் வயப்படுவார்கள். சேர்ந்து பயணிப்பார்கள்.

4. ராம்களாகப் பெண்களும் ஜானுக்களாக ஆண்களும் இருக்கின்றனர். நாம் ராமா அல்லது ஜானுவா என்பதை நமது சூழ்நிலையே முடிவு செய்கின்றது.

5. கலை என்பது விமர்சனமும் சேர்ந்தது. ஆரோக்கியமான விமர்சனம் அவசியம். அதுவே சமூகத்தை முன்னேற்றும்.

6. அடுத்த நபரை தொட்டோ தொடாமலோ பழகுவது அவரவர் விருப்பம். ஆனால் நீங்கள் தொடப்போகும் நபர் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருக்க வேண்டும். Uncomfortableலாகப் பீல் பண்ணக் கூடாது. Mutual - Consent & Respect is Important.

7. #MeToo & #TimesUp தருணத்திலாவது நாம்  இதைச் சிந்திக்க வேண்டும். முக்கியமாக, ஆண்களாகிய நாம், நம்முள் மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது.

8. தான் பழகும் முறை தான் சரி. தனக்கு எதிராக/பிடிக்காது விளங்கும் முறைகள் அனைத்தும் தவறு என்று radicalize செய்யாமலிருக்க வேண்டும். மதத்தில் ஆரம்பித்து Sexual Orientation வரை, சட்டத்திற்கும் சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் Personal Choices அனைத்திற்கும் இந்தக் கருத்து பொருந்தும்.  Staying Single for Life is also a Personal Choice.

9. முந்தையபதிவைப் படித்துவிட்டு, பலர் என்னுடன் உரையாடினார்கள். அதில் கல்லூரி நண்பரும் ஒருவர். அவர் சொன்னது தான் இந்த Screenshot.



10. இதில் சொல்லப்பட்டிருக்கும் பிரச்சனை என்னவென்பது தெளிவாகப் புரியவில்லை, அடிப்படையைத் தெரிந்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணுபவர்கள், 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தைப் பார்க்கலாம்.

     இந்த நண்பரும் ஒரு 'ராம்' தான். அவரது காதலியும் ஒரு 'ஜானு' தான். இவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகிறோம்?

#realitycheck.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives