Sunday 12 March 2017

March 12 | மார்ச் 12



March 12, 2011.

எப்போதும் கல கலவெனப் பேசும் தோழி அன்று ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி இருந்தாள். என்னவெனக் கேட்க, "அப்புறம் சொல்றேன்" எனக் கூறி கிளம்பிவிட்டாள். அன்று மாலை அவளிடமிருந்து ஒரு FB மெசேஜ்.
அதன் சுருக்கம் :

"நான் 9th std. படிக்கும் போது எங்கள் வீட்டிற்கு என் தந்தையோடு பணிபுரியும் மற்றொரு டாக்டர் நண்பர் வந்திருந்தார். சிறு வயதிலிருந்தே எனக்கு அவர் நல்ல பழக்கம். அவரை வரவேற்றுவிட்டு என்னுடைய ரூமிற்குச் சென்றுவிட்டேன். என் அம்மா, அப்பா மற்றும் அக்கா ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நான் என்னுடைய ரூமில் study டேபிளில்  உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.
அங்கிள் என்னைப் பார்க்க என்னுடைய ரூமிற்கு வந்தார். வந்தவுடன் நான் Zoology படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க, நான் படித்துக்கொண்டிருந்த டாபிக்கை எனக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

சொல்லிக் கொடுக்கும் போது அவர் கையை என் தோள் மீது வைத்தார்.
பின்பு மெதுவாக...[ *** ]

என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நான் இருந்தேன். ஹாலில் இருக்கும் அம்மா/அப்பா/அக்காவை கூப்பிட வேண்டும் அல்லது அந்த அங்கிளை எதிர்த்திருக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் அந்த நொடியில் எனக்குத் தோன்றவில்லை. அந்த நொடியில் என்னையும் அறியாமல் என்னால் ஒன்று மட்டும் தான் செய்ய முடிந்தது.
அழுகை!
ஆம், நான் அழ ஆரம்பித்தேன். அதனால் அந்த டாக்டர் ஆண்மகன் அவர் 'செய்துக்கொண்டிருந்ததை' நிறுத்திவிட்டு 'அழாதே' என்று சொல்லி ரூமைவிட்டு வெளியே போய்விட்டார். அவர் வீட்டை விட்டு கிளம்பியதும்  நான் அழுதிருந்ததைக் கவனித்த என் அம்மா 'என்ன ஆச்சு?' எனக் கேட்க நான் நடந்ததைச் சொன்னேன். என்னை சமாதானப்படுத்தினார். அன்றிலிருந்து தூங்கும் போது இந்தச் சம்பவம் அப்ப அப்ப கனவாக வரும். நடு இராத்திரியில் எழுந்து அழுவேன். வருடா வருடம் இந்த நாள் வரும்போது ஒரு haunted feel என்னுள் உருவாகிவிடும். என்னால் சாதாரண நிலையில் மார்ச் 12 அன்று இருக்க முடியாது. எவ்வளவோ try செய்து பார்த்துட்டேன். But மாத்த முடியில. பழசு தான் மறுபடி மறுபடி flash ஆகுது."

[ *** ] - This blank space is to run your imaginary horse.
Yes, you read that right. Whatever you are imagining now had happened to her that day.

----------------------------------------------------------------------------------------------------------------------

March 12, 2012 - I called her. She didn't pick up the call. Got a text message from her saying, "I will call you tomorrow."

March 12, 2013 - I called her. She didn't pick up the call. Got a text message from her saying, "I know that you will call today. I will call you tomorrow."

March 12, 2014 - Out of touch.

March 12, 2015 - After nearly 1.5 years, got a call from her. She had called me to invite for her wedding. Her voice was filled with happiness.

March 12, 2016 - Coincidentally, heard that she gave birth to a beautiful girl child.

----------------------------------------------------------------------------------------------------------------------

"இந்தப் பதிவை இப்போது ஏன் எழுதுகிறாய்?"
"Women's Day தான் முடிந்து விட்டதே! இப்ப எதுக்கு  இத எழுதுறான்?"
"இது போன்ற பதிவுகளால் என்ன நன்மை வந்துவிடப் போகிறது?"
போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இப்போது தோன்றியிருக்கலாம்.

இது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் என்னுடைய பதில் இது தான் :

மார்ச் 12யை அவள் மறந்துவிட்டால். வாழ்க்கை அவளை நகர்த்திவிட்டது. மகிழ்ச்சி.
ஆனால், என்னால் மார்ச் 12யை மறக்க முடியவில்லை.
நான் இப்போது என்ன செய்ய வேண்டும் ?!?

Belated Women's day wishes.

#child_abuse.




0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives