Wednesday 15 June 2016

கேட்ஜெட்ஸ் ஸ்கேன் | Gadget Scan

மோட்டோ ஜி 4 பிளஸ் vs ரெட்மி நோட் 3 vs லெனோவோ ZUK Z1 - எதை வாங்கலாம்?


ரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஸ்மார்ட்போனை மாற்றும் இன்றைய ஜெனரேஷன் வாடிக்கையாளர்களுக்கான பெரும் பிரச்னை, ஸ்மார்ட் போனை தேர்ந்தெடுப்பதில்தான். தினமும் விதவிதமான புதுப்புது ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் பெரும் குழப்பத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பட்ஜெட் High-End தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களான மோட்டோ ஜி 4 பிளஸ், ரெட்மி நோட் 3 மற்றும் லெனோவோ ZUK Z1 ஆகியவற்றின் பிளஸ் மற்றும் மைனஸ் விஷயங்களைப் பார்ப்போம். இவற்றின் அடிப்படையில் நீங்கள் உங்களுக்கு வசதியான ஸ்மார்ட் போனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1. கட்டமைப்புத் தரம்: (Build Quality)
கட்டமைப்பை பொறுத்தவரை லெனோவோ ZUK Z1 ஸ்மார்ட் போனிற்குத்தான் முதலிடம்.  175 கிராம் எடையுள்ள இந்த போனில் டிஸ்ப்ளேவை பாதுகாக்கும் Corning Gorilla Glass இல்லை என்பது மைனஸ். கட்டமைப்புத் தரத்தில் இரண்டாமிடம் மோட்டோ ஜி 4 பிளஸ் போனைச் சேரும். மூன்றாமிடம் ரெட்மி நோட் 3 ஸ்மார்ட் போனைச் சேரும். இந்த இரண்டு போனிலும் Corning Gorilla Glass அமைந்துள்ளது.

2. பேட்டரி: (Battery)

ஸ்மார்ட் போனின் இன்றைய முக்கியத் தேவை பேட்டரியின் திறன். பேட்டரியை பொறுத்தவரை போட்டியே இல்லாமல் முதலிடம் பிடிப்பது ரெட்மி நோட் 3 ஸ்மார்ட் போன்தான். 4000 mAh பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், முழுப் பயன்பாட்டில் கிட்டதட்ட 8.5 மணி நேரம் வரை உழைக்கும் தன்மையுடையது. லெனோவோ ZUK Z1வை பொறுத்தவரை 5.5-6 மணி நேரம் வரை உழைக்கும். மோட்டோ ஜி 4 பிளஸ் ஸ்மார்ட் போன் 4.5-5.5 மணி நேரம் வரை முழுப் பயன்பாட்டில் உழைக்கும்.

3.கேமிங்: (Gaming)

இன்றைய ஸ்மார்ட் போன்களின் முக்கியச் செயலாக கேமிங்  அமைகிறது. கேமிங்கை பொறுத்தவரை,  மோட்டோ ஜி 4 பிளஸ் ஸ்மார்ட் போனிற்குத்தான் முதலிடம். மோட்டோ ஜி 4 பிளஸ் போனில் அனைத்து கேம்களையும் கச்சிதமாக விளையாடலாம். ஆனால் அப்படி 15 நிமிடங்களுக்கு மேல் விளையாடும்போது, போன் 46 - 47 டிகிரி செல்சியஸ் வரை சூடாகிறது. அதிக நேர கேமரா பயன்பாட்டிலும் இந்தப் பிரச்னையை மோட்டோ ஜி 4 பிளஸ் போனில் பார்க்கலாம்.
இரண்டாமிடத்தைப் பிடிக்கும் லெனோவோ ZUK Z1 ஸ்மார்ட் போன், நீண்ட கேமிங்க்குப் பிறகு 43.5 டிகிரி செல்சியஸ் வரை சூடாகிறது. சில பெரிய கேம்கள் இந்த ஸ்மார்ட் போனில் சப்போர்ட் ஆகவில்லை.  ரெட்மி நோட் 3 மூன்றாவது இடத்தைப் பிடித்தாலும், இதில் பெரும்பாலும் சூடாகுவதில்லை. ஆனால் சில பெரிய கேம்கள் சரியாகச் செயல்படுவதில்லை என்பது இதன் மைனஸ்.

4. டிஸ்ப்ளேவின் தரம்: (Screen Quality)

டிஸ்ப்ளேவை பொறுத்தவரை மூன்று போன்களுமே 1080 பேனல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஆனால் மூன்றையுமே ஒப்பிட்டுப் பார்த்தல், மோட்டோ ஜி 4 பிளஸ் முதல் இடத்தைப் பிடிக்கிறது. இரண்டாம் இடத்தை லெனோவோ ZUK Z1 ஸ்மார்ட் போன் பிடிக்கிறது. ரெட்மி நோட் 3 மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறது.

5. கேமரா: (Camera)

நல்ல கேமரா ஒரு ஸ்மார்ட் போனிற்கு அடிப்படை தேவை. அதுவும் இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் போன்ற அப்ளிகேஷன்களின் முக்கிய தேவையே நல்ல கேமராதான். அந்த வகையில், இந்த மூன்று ஸ்மார்ட் போன்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, பின்புறக் கேமராவை பொறுத்தவரை மோட்டோ ஜி 4 பிளஸ் போனிற்குத்தான் முதலிடம். ஆனால் 15 நிமிடங்களுக்கு மேல் கேமராவை பயன்படுத்தும்போது, போன் 46 - 47 டிகிரி செல்சியஸ் வரை சூடாகிறது. இதுதான் பெரிய மைனஸ். இரண்டாமிடத்தை லெனோவோ ZUK Z1 பிடிக்கிறது. ரெட்மி நோட் 3 மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறது.

முன்புறக் கேமராவை பொறுத்தவரை, முதலிடத்தை லெனோவோ ZUK Z1 போன் பிடிக்கிறது. இரண்டாமிடத்தை மோட்டோ ஜி 4 பிளஸ் பிடிக்கிறது. மூன்றாமிடத்தை ரெட்மி நோட் 3 பிடிக்கிறது. லெனோவோ ZUK Z1 போனின் முன்புறக் கேமராவைக் கொண்டு ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோவின் தரம் சற்றுக் குறைவாகவே உள்ளது.

6. ஆன்ட்ராய்ட் அப்டேட்ஸ்: (Android Updates)

சிறிது மாற்றங்களோடு உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாக் ஆன்ட்ராய்ட்தான் மோட்டோ ஜி 4 பிளஸ் போனின் இயங்குதளம். இதனால், மோட்டோ ஜி 4 பிளஸ் போனிற்கு ஆன்ட்ராய்ட் அப்டேட்ஸ் விரைவாகக் கிடைக்கும். Cynogen இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் லெனோவோ ZUK Z1 போனிற்கான ஆன்ட்ராய்ட் அப்டேட்ஸ், Cynogen நிறுவனத்தைப் பொறுத்து அமையும். ரெட்மி நோட் 3 MIUI டிசைன் மாற்றங்களைக் கொண்ட ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. பொதுவாக இதற்கான ஆன்ட்ராய்ட் அப்டேட்ஸ் கிடைப்பது சிரமம்.

7.சேமிப்புத் திறன்: (Storage)
ரெட்மி நோட் 3 - 3GB ரேம் + 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ். ஹைப்ரிட் SD கார்ட் ஸ்லாட் வசதி கொண்டுள்ளது. அதாவது இரண்டாவது சிம்மிற்குப் பதிலாக SD கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். 

மோட்டோ ஜி 4 பிளஸ்  -   3GB ரேம் + 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ். Dedicated SD கார்ட் வசதி கொண்டுள்ளது. அதாவது இரண்டு சிம் ஸ்லாட் மற்றும் SD கார்ட் ஸ்லாட் தனித்தனியாக இருக்கும்.

லெனோவோ ZUK Z1  - 3GB ரேம் + 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ். SD கார்ட் வசதி கிடையாது.

8. விலை: (Price)

ரெட்மி நோட் 3 - 3GB ரேம் + 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் - விலை = ரூ. 11,999.

மோட்டோ ஜி 4 பிளஸ் - 3GB ரேம் + 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் - விலை = ரூ. 14,999. 

லெனோவோ ZUK Z1  - 3GB ரேம் + 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் - விலை = ரூ. 13,499. 

ரிசல்ட்:

# சிறப்பான பின்புறக் கேமரா வேண்டும் வாடிக்கையாளர்கள் மோட்டோ ஜி 4 பிளஸ் போனை தேர்ந்தெடுக்கலாம்.

# சிறப்பான முன்புறக் கேமரா வேண்டும் வாடிக்கையாளர்கள் லெனோவோ ZUK Z1 போனை தேர்ந்தெடுக்கலாம்.

# சிறப்பான பேட்டரி வேண்டும் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 3  போனை தேர்ந்தெடுக்கலாம்.

- செ.கிஸோர் பிரசாத் கிரண் 

Link:



0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives