Monday 20 April 2015

# அழுதால் தான் என்ன?



இந்தப் படத்தில் இருக்கும் சிரிப்பிற்குப் பல நெடிய காரணங்கள் உள்ளன.
ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் - 'கல்லூரி' !
எனது கல்லூரி!

பலதரப்பு விஷயங்களைப் பல்வேறு கோணத்தில் நம் அனைவருக்கும் சொல்லித் தந்தது கல்லூரி வாழ்க்கை தான்.
நட்பால் பிணைக்கப்பட்ட நண்பர்களைத் தந்ததோடு, பாசத்தால் உருவெடுத்த தம்பி, தங்கை, அக்கா மற்றும் அண்ணன்களைத் தந்ததும் கல்லூரி தான்.
இவை அனைத்தையும் நான்கு வருடங்களாகக் கொடுத்துவிட்டு, பின்பு ஒரே நாளில்,
உனக்கு இனிமேல் இது எதுவும் கிடையாது எனச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்!?

இந்தப் புகைப்படத்தில் சிரிப்பை மட்டுமே காண முடியும்.
காரணம் - கேமராக்களால் மன அழுகையைப் படம் பிடிக்க முடியாது!
கல்லூரி வாழ்க்கை தந்த அன்பையும் அரவணைப்பையும் ஏத்துக்கத் தெரிந்த எனக்கு, அதன் பிரிவினை சிரிதளுவு கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு சுயநலவாதியாக அழுது கொண்டு நிற்கிறேன்.

என்ன இவன் ஒரு 'Emotional Idiot'யை போல புலம்பி தள்ளுகிறான் என்ற கேட்பவர்கள் கண்டிப்பாக கல்லூரியை விட்டுப் பிரியவிருக்கும் கடைசி வருட மாணவர்களாக இருக்க மாட்டார்கள். கல்லூரி வாழ்கையை அனுபவித்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
காரணம் - இதன் வலி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தெளிவாகப் புரியும்.

ஆழமான அன்பினை பல உறுவுகளின் வழியாகத் தந்தாய்.
வாழ்க்கை அற நெறிகளைக் காலத்தின் செயலாக வித்திட்டாய்.
இத்தனை பொக்கிஷங்களைத் தந்து உனக்கு,
மண் மேல் மண்டியிட்டு என் முகத்தினை உன் கோபுரத்தின் மேல் நோக்கி, சொல்லிக்கொள்வது ஒன்று தான்...

Dear College of Engineering, Guindy,
I Love You.
And I owe You a Lot!

# Final-year/final-days.

(April 20,2015)

  1 comment:

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives