Sunday 19 April 2015

கேட்ஜெட்ஸ் | அமேசான் கிண்டில் வோயேஜ் (Amazon Kindle Voyage)

மேசான் நிறுவனம் தனது கிண்டில் இ-புக் ரீடர் மூலம் இ-புக் ரீடர் மார்க்கெட்டில் தனக்கான பிரத்யேகமான இடத்தைப் பிடித்துள்ளது. சிம்பிள் டிசைன், சூப்பர் பேட்டரி ஆகிய இரண்டும்தான் கிண்டில் இ-புக் ரீடரின் சக்சஸ் சீக்ரெட். அந்த வகையில் அமேசான் நிறுவனம் தனது புதிய இ-புக் ரீடரான ‘அமேசான் கிண்டில் வோயேஜ்’ என்ற இ-புக் ரீடரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

1. டிசைன்!
அமேசான் கிண்டில் வோயேஜ்ஜின் எடையும் அடர்த்தி யும் மிகக் குறைவு. மற்ற அமேசான் இ-புக் ரீடரைக் காட்டிலும் இந்தக் கிண்டில் வோயேஜை சுலபமாக ஒரு கையில் பிடித்துப் பயன்படுத்த லாம். நீண்ட நேரம் பயன்படுத்தி னாலும் கையில் எந்தவித சிரமமும் இருக்காது. பிரீமியம் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட இந்த இ-புக் ரீடர், தனது பவர் பட்டனை பின்புறத்தில் பெற்றுள்ளது.
2. டிஸ்ப்ளே!
மற்ற கிண்டில் இ-புக் ரீடரை விட கிண்டில் வோயேஜ்ஜின் டிஸ்ப்ளேவின் திறன் அதிகப் படுத்தப்பட்டுள்ளது. 300 PPI கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே துல்லியமான மற்றும் தெளிவான வார்த்தைகளைக் காண்பிக்கும் திறனைப் பெற்றுள்ளது.
மேலும், இந்த டிஸ்ப்ளே     ‘Ambient Light Sensor’ என்ற சென்ஸாரைப் பெற்றுள்ளது. இது வெளிச்சத்துக்கேற்ப  டிஸ்ப்ளேவின் ஒளிர்வை மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. மேலும், ‘Night Light Feature’ என்ற தொழில்நுட்பம் இருட்டில் தானாக டிஸ்ப்ளேவின் ஒளிர்வைக் குறைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் கண்களை பாதிப்பில் இருந்து தடுக்கலாம்.
3. தொழில்நுட்பம்!
புதிய கிண்டில் வோயேஜ் இ-புக் ரீடர் ‘Pagepress’ என்ற வசதியைப் பெற்றுள்ளது. ரீடரின் கீழ் பகுதியின் வலப்பக்கமும் இடப்பக்கமும் ஒரு சிறிய கோடு உள்ளது. இந்தக் கோட்டை டச் செய்வதன் மூலம் முன்பக்கமும் பின்பக்கமும் இ-புக்கின் பக்கங்களை எளிதாகத் திருப்பிக் கொள்ளலாம். மேலும், மற்ற இ-புக் போல ஸ்க்ரீனில் டச் செய்தும் இதைச் செய்யலாம்.
4. கூடுதல் வசதி!
கிண்டில் வோயேஜ் மற்ற அமேசான் இ-புக் ரீடர்களின் இயங்குதளத்தைக் கொண்டுதான் இயங்குகிறது. இதில் எந்தப் பெரிய மாற்றங்களும் இல்லை என்றாலும், ‘Family Library’ போன்ற சிறிய மாற்றங்கள் இதில் உண்டு. இந்த வசதியைக் கொண்டு குடும்பத்தில் உள்ள ஒருவர் மற்றவருடன் தங்களது புத்தகங்களை ஷேர் செய்துக்கொள்ளலாம்.
5. மாடல்கள்!
கிண்டில் வோயேஜ் இ-புக் ரீடர் இரண்டு மாடல்களில் வருகிறது. ஒன்று, வைஃபை (WiFi) வசதியுடன் மட்டும். மற்றொன்று, வைஃபை மற்றும் 3G வசதியுடன். வைஃபை மாடலின் விலை ரூபாய் 16,499. வைஃபை + 3G மாடலின் விலை ரூபாய் 20,499.
பிளஸ்:
டிசைன்
பேட்டரி
மைனஸ்:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives