Tuesday 16 September 2014

கேட்ஜெட்ஸ் | ஸ்மார்ட் வாட்ச்: ஆண்ட்ராய்டு VS ஆப்பிள் ஐஓஎஸ்!


ஸ்மார்ட்போன்கள் ஒருபக்கம் பிரபலமாகி வர, இன்னொரு பக்கம் ஸ்மார்ட் வாட்ச்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது புது புது ஸ்மார்ட் வாட்ச்கள், டெக் உலகத்தை ஆக்கரமிக்க, இயங்குதளத்தின் (Operating System) ஒப்பீட்டை ஸ்மார்ட் வாட்ச்களுக்கு இடையே செய்து பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சான ஐவாட்சை வெளியிட, ஹெச்.டி.ஸி. நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்சை விரைவில் வெளியிடவுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சான மோட்டோ 360யை வெளியிட்டு சிறிது நாட்களில் அதன் புக்கிங் முடிந்துவிட்டது. மேலும், சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனமும் தங்களது ஸ்மார்ட் வாட்ச்களை வெளியிட்டுள்ளனர்.

இயங்குதளத்தின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் வாட்ச்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று ஆப்பிளின் ஐ.ஓ.எஸ்.சில் இயங்கும் ஐவாட்ச். மற்றவை எல்லாம் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்படுபவை.

விலை:
விலையின் அடிப்படையில் பார்க்கும்போது ஆப்பிளின் ஐவாட்ச் $349-க்கு விற்கப்படுகிறது (சுமார் 21,282 ரூபாய்). ஆனால், சராசரியாக அனைத்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை $200-க்குள் (சுமார் 12,178 ரூபாய்) அமைந்து விடுகிறது. இதனால், பெரும்பாலானோர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்களையே தங்கள் முதல் சாய்ஸாக வைத்துக்கொள்கிறார்கள். ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், ஐவாட்சை மட்டும் தான் அவர்கள்  பயன்படுத்த முடியும்.

செயல்பாடு:
ஆப்பிள் தனது ஐவாட்சில் குறிப்பிட்ட சேவைகளை மட்டும் வழங்கினாலும், தரும் சேவைகளை சிறப்பாக செய்யும் ஆற்றலை பெற்றுள்ளது. ஆனால், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்கள் பல சேவைகளை தரும் திறன் பெற்றதாய் இருக்கிறது. இருந்தாலும், அனைத்து சேவைகளையும் சிறப்பாக செய்யும் ஆற்றல் அதனிடம் குறைவாகவே உள்ளது.

டிசைன்:
டிசைன் அடிப்படையில் பார்க்கும் போது ஐவாட்ச்சிற்கு நிகர் வேறு எந்த ஸ்மார்ட் வாட்ச்சையும் ஒப்பிட முடியாது. ஸ்போர்ட்ஸ்மேன் லுக்கிலிருந்து ஒரு பிஸ்னெஸ்மேன் லுக் வரை, எந்த வகையிலும் ஐவாட்சை மாற்றிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்கள் தங்களது விலைக்கேற்ற வகையில் ஒரே லுக்கை மட்டுமே வழங்குகின்றன.

மொத்தத்தில், அதிகபடியான சேவை மற்றும் விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்களின் பிளஸ். சிறப்பான சேவை மற்றும் டிசைன் ஐவாட்சின் சிறப்பம்சம்.

Link:
http://www.vikatan.com/article.php?module=news&aid=32427&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=5

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives