Wednesday 10 September 2014

கேட்ஜெட்ஸ் | மோட்டோ ஜி 2nd ஜென் (Motorola Moto G2)

மாற்றத்துடன் களமிறங்கி இருக்கிறது மோட்டோரோலாவின் மோட்டோ ஜி (2nd Gen)!



  இந்த ஆண்டின் அதிக அளவில் விற்பனையான ஸ்மார்ட் போன்களில் மோட்டோரோலாவின் மோட்டோ ஜியும் அடங்கும். அதன் வரிசையில் மொட்டோரோல்லா நிறுவனம் கடந்த வாரம் தனது, ‘மோட்டோ ஜி (2nd gen)’ ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. மோட்டோ ஜி 2nd ‘Generation’ என்ற பெயருக்கேற்ப இப்போது வெளிவந்துள்ள இரண்டாம் தலைமுறை ‘மோட்டோ ஜி’, முந்தைய மோட்டோ ஜியில் சில முன்னேற்றங்களோடு வெளியாகியுள்ளது.

சுமாரான கேமரா மற்றும் SD கார்ட் வசதி ஆகியவை முந்தைய மோட்டோ ஜியின் குறைபாடுகள். இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் தற்போதைய இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜி வெளியாகியுள்ளது. புதிய மோட்டோ ஜி 5 இன்ச் 720x1280 pixels (~ 294 ppi ) IPS LCD தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த தொடுதிரை, கீறல்களை சமாளிக்க ‘Corning Gorilla Glass 3’ என்ற கண்ணாடியை கொண்டுள்ளது. ஆனால் பழைய மோட்டோ ஜி 4.5 இன்ச் தொடுதிரையை தான் பெற்றிருந்தது.

பழைய மோட்டோ ஜி 5 மெகா பிக்ஸல் பின்புறக் கேமராவையும் 1.3 மெகா பிக்ஸல் முன்புறக் கேமராவையும் பெற்றிருந்தது. இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜி சக்திவாய்ந்த 8 மெகா பிக்ஸல் பின்புறக் கேமராவையும் 2 மெகா பிக்ஸல் முன்புறக் கேமராவையும் கொண்டுள்ளது. ஆட்டோ போகஸ், பேஸ் திடக்-ஷன், ஸ்லோ-மோஷன் என பல செயல்பாடுகளை இந்த 8 மெகா பிக்ஸல் கேமரா மூலம் பெறலாம்.

முந்தைய மோட்டோ ஜி போலவே இந்த இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜியும் 1.2GHz Quadcore குவால்காம் ஸ்நாப்டிராகன் 400 என்ற மிக சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் 1GB ரேம்மை கொண்டு இயங்குகிறது. மேலும் ‘Adreno 305’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் இந்த இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜியில் அடங்கும். ஆண்டுராய்ட் 4.4.4 கிட்கேட்டைக் கொண்டு இயங்கும் மோட்டோ ஜி(2nd Gen) யின் இன்டர்னல் மெமேரி 16GB. மேலும் 32GB வரை SD கார்ட் மூலம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். ஆண்டுராய்ட் 4.4.4யின் அடுத்த வெர்ஷனும் மோட்டோ G (2nd Gen)க்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பேட்டரி வசதியை பார்க்கும் போது மோட்டோ ஜி(2nd Gen), 2070 mAh சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 24மணி நேரம் வரை உழைக்கும் இந்த பேட்டரி, இதே விலையில் உள்ள அனைத்து ஸ்மார்ட் போன்களை விட நீடித்து உழைக்கும் திறனைக் கொண்டுள்ளது.

டூயல் சிம் வசதியோடு வரும் மோட்டோ G (2nd Gen), தவறுதலாக தண்ணீரில் விழுந்தாலோ மழையில் நினைந்தாலோ எந்த பாதிப்பும் ஆகமால் இருக்க ‘Water Resistant Coating’யை பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜி இரண்டு ‘Stereo’ ஸ்பீக்கர்களை பெற்றுள்ளது. இந்த இரண்டு Stereo ஸ்பீக்கர்களுமே முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடல்களையோ ஸ்பீக்கர் கால்களையோ தெளிவாக கேட்கலாம்.

சிறப்பான தொழில்நுட்பம், லேட்டஸ்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெரிய துல்லியமான டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பேட்டரி என்று இரண்டாம் தலைமுறை மோட்டோ ஜி இந்திய சந்தையில் Rs.12, 999 விலையில் விற்பனையாக தொடங்கியுள்ளது. பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கம்மியான ஸ்மார்ட் போன்களில் மோட்டோ G (2nd Gen) வாடிக்கையாளர்களின் பெஸ்ட் சாய்ஸாக அமையும். மோட்டோ G (2nd Gen)யை இந்தியாவில் ஃபிளிப்கார்டில் (Flipkart.com) மட்டும் தான் வாங்கலாம் என்பது கூடுதல் தகவல்.

Link:
http://www.vikatan.com/article.php?module=news&aid=32227&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=5

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives