Sunday 20 October 2013

Old Curiosity Shop | Nanayam Vikatan | நாணயம் விகடன்

சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் ப்ளாசாவிற்கு எதிரில் உள்ளது பேரார்வமூட்டும் பழைய பொருட்கள் அங்காடி (The Old Curiosity Shop).65 ஆண்டுகளாக இதை  நடத்திவரும் லத்தீப்பிடம் பேசினோம்.  

'1946-ம் ஆண்டு ‘Kashmir Art Palace’ என்ற பெயரில் என் தந்தை குலாம் முஹம்மது இந்த கடையை ஆரம்பித்தார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த அவர் அந்தந்த நாட்டில் செய்யப்படும் கைவினைப்பொருட்களை வாங்கி இங்கு விற்க ஆரம்பித்தார். இது ஆங்கிலேயர்களை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேய அரசு அதிகாரிகள் முதல் சாதாரண கூலி வேலை செய்யும் மனிதர்கள் வரை எங்கள் கடையின் பிரத்யேகமான வாடிக்கையாளராக அமைந்தார்கள். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. சமீபத்தில்கூட ஆட்டோக்காரர் ஒருவர் தன் நண்பனின் கல்யாணத்திற்காக வித்தியாசமாக பரிசு தர வேண்டும் என்று நினைத்து எங்கள் கடைக்கு வந்து பழங்கால கலைப்பொருள் ஒன்றை வாங்கிச் சென்றார். கலை ஆர்வம் இருப்பவர்களுக்கு எங்கள் கடை ஒரு நல்ல விருந்தை அளிக்கும். சாதாரண பழைய பொருட்கள் என்று ஒதுக்காமல் அதை முறையாகப் பராமரித்து வந்தால் பொருட்களைப் பொறுத்து பல ஆயிரங்களிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை அந்தப் பொருட்கள் நமக்கு வருமானத்தை ஈட்டித் தரும்'' என்றார் அவர்.
இனி தேவையில்லை என எந்தப் பொருளையும் தூக்கி எறியாமல் வைத்திருந்தால், நிச்சயம் நல்ல விலைக்கு விற்கலாம்!

Link:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives