Monday 13 November 2017

She & He #2


He: Lakshmi Short Film பாத்தியா? நல்லாருக்கு.


She: பார்த்தேன். நடிப்பும் காட்சி அமைப்புகளும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆன்லைன்ல இப்ப அதுதான் வைரல் போல.
He: ஆமா. அந்த short film வைத்து பல சண்டை ஓடிக்கிட்டிருக்கு.
She: எதிர்ப்பார்த்ததுதான்.
He: பின்ன. Feminism பேசுர படம் எப்படி எல்லார்க்கும் பிடிக்கும்.
She: படம் Feminism பேசுதா?
He: ஆமா. Lakshmi செய்தது மட்டும் தப்புன்னு கோபப்படுறவங்க ஏன் அவளோட கணவர் ஷேகர் செய்ததும் தப்புனு சொல்லறதில்ல?
She: சரி - தவறு debate'க்கு நான் வரல. It's subjective here. But, ஒரு தவறு யார் செய்தாலும் தவறு தான் . Smoking is injurious to both men & women. But, இந்தப் படத்துல எங்க Feminism வந்துச்சு?
He: இதெல்லாம் பெண்கள் செய்யக்கூடாதுன்னு சொல்றத, ஒரு பெண் அந்தத் தடைகளை உடைத்து செய்தால் அது தான் Feminism. இந்தப் படத்துல லக்ஷ்மி ஒரு Feminist.
She: ஓ...Feminism'கு இப்படி ஒரு explanation இருக்கா?!?
நம்ம மக்களுக்கு இது தான் பிரச்சனை. பாதிப் பேருக்கு Feminism'னா ஒரு சரியான புரிதலே இல்லை.
He: சரி, நீயே சொல்லு, Feminism'னா என்ன?
She: Feminism is a conscious effort of a women to attain Freedom & Equality of Gender. லக்ஷ்மி எடுத்த முடிவு conscious decision கிடையாது. அவள் ஒரு சூழ்நிலை கைதி. அவளோதான்.
He: புரியலையே.
She: லக்ஷ்மியோட கணவர் ஷேகர், அவள் புதுசா சந்திக்கும் கதிர் இவங்க இரண்டு பேருக்குமே ஒரே குணம் தான். இரண்டு பேருமே society rulesகளை உடைத்து வேறொரு பெண்ணோடு உறவு வெச்சுக்குறாங்க. ஷேகர் போன்ல பேசற பொண்ணோட உறவு வெச்சுக்கிறான். கதிர் லக்ஷ்மியோட. அவளோதான் வித்தியாசம்.
He: அப்ப லக்ஷ்மி சுயமா முடிவ எடுக்கலன்னு சொல்ற.
She: ஆமா. ஒரு சூழ்நிலை கைதியாக, அவளோட தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பிக்கக் கதிரை பயன்படுத்திக் கொள்கிறாள். It's just an escapism.
He: Hmm. அப்ப லக்ஷ்மி ஒரு Feminist'னா என்ன பண்ணிருப்பா?
She: Marital rape, பிடிக்காத கணவன் இதைக் காரணமா கொண்டு அவள் தற்போதைய உறவிலிருந்து வெளிவந்திருப்பா. பிறகு தனியாக இருக்கலாமா அல்லது வேறு உறவை தேர்ந்தெடுக்கலாமா என்பது அவளுடைய தனிப்பட்ட விருப்பமாக இருந்திருக்கும்.
He: இப்பயும் அது தான அவ செய்யுரா?!? என்ன, திருமணத்தில் இருக்கும் போதே வேறு உறவு வைத்துக்கொள்கிறாள். அவளோ தான் difference.
She: ரொம்ப ஈஸியா சொல்லிட்ட. லக்ஷ்மி, ஷேகர் & கதிர் - இவங்க மூணு பேர் தவிர ஒரு கதாபாத்திரம் இருக்கு. ஒரு பையன். அந்தச் சின்னப் பையன். அவனோட பெயர் கூட நமக்கு யாருக்கும் தெரியாது. அவன் தான் இந்தப் படத்தோட main character.
He: இது புதுசா இருக்கே. எப்படி?
She: கட்டில் மேல படுத்திருக்கும் தன் பையன் எழுந்துவிடுவானோ என்று பயப்படும் லக்ஷ்மி, தானும் தனது கணவரும் ஒரு தவறான உதாரணமாக அவனுக்கு இருந்துவிடக்கூடாது என்று பயப்படவில்லை. யோசிக்கக்கூட இல்லை. லக்ஷ்மி, ஷேகர் முடிவுகளைப் பார்த்து அவர்களின் மகனுக்கு உருவாக இருக்கும் மன நிலைமையை நாம் யாரும் யோசிக்க மாட்டோம். அவன் தான் அடுத்தத் தலைமுறை. அடுத்தத் தலைமுறைக்கு நாம் என்ன கற்றுக்கொடுக்கிறோம் என்பது மிக முக்கியம்.
He: I accept this. நீ சொல்றது போல லக்ஷ்மி divorce செய்து அவள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்தறது எந்த அளவுக்குச் சாத்தியம்? கொஞ்சம் practical'லா யோசி!
She: இப்ப தான் நீ point'க்கு வர. ஒரு பெண் அவள் விருப்பத்திற்கு ஏற்ப இந்தச் சமூகத்துள்ள வாழ முடியாததுதான் பிரச்சனை. This is women suppression. Destroying this and achieving freedom & equality is Feminism.
He: Right. Now I understand the problem. சரி, இவளோ mixed response இந்தப் படத்திற்கு. இதை வெற்றி என எடுத்துக்கலாமா? இல்ல தோல்வி'னு எடுத்துக்கலாமா?
She: படம் அதற்கான முழு வெற்றியை பெற்றிருக்கிறது.
He: எப்படி இவளோ strong'கா சொல்ற?
She: An art should make people think. It must make its audience retrospect their opinion. This movie has achieved it. நம்ம இரண்டு பேரும் இந்தப் படத்த பத்தி இவளோ பேசுறோம். பல பேர் debate பண்றாங்க. இது தான் ஒரு கலைக்கான வெற்றி. கலைஞனுக்கான வெற்றியும் கூட.
He: இப்ப புரியுது. This short film is a slice of a woman's life. It's a beautiful portrayal of it. But, இத ஒரு Feminism மூவி'னு கொண்டாதறது தவறு தான்.
She: Exactly. இத நான் சொல்லலாம். நீ சொல்லக்கூடாது.
He: ஏன்?
She: சொன்னா, உன்னைய ஆணாதிக்கவாதி'னு முத்திரை குத்திடுவாங்க.
He: 😨
She: 😂


#subjective.

A post shared by Kishore Prasath Khiran (@kpkism) on

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives