Monday 2 March 2015

கேட்ஜெட்ஸ் | க்ரியேடிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் (Creative Sound Blaster Roar)

மீபத்தில் க்ரியேட்டிவ் நிறுவனம் தனது புதிய ஸ்பீக்கரான 'க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர்’ ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்பீக்கர் உலக அளவில் பல்வேறு சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

டிசைன் க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரின் டிசைன் எளிமையாகவும், கச்சிதமாகவும் அமைந்துள்ளது. இதன் டிசைன் மட்டுமே பிரத்யேகமாகச் சில விருதுகளைப் பெற்றுள்ளது. வெளிப்புறம் முழுவதும் அலுமினியத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்பீக்கர், 57*202*115 மி.மீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம், பின்புறம் மற்றும் அடிப்பாகம் முழுவதும் சிலிக்கானைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், ழிதிசி (Near Field Communication), 'ரோர்’ பட்டன் ஆகிவற்றில் LED லைட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த LED லைட் பட்டன்கள் ஒவ்வொரு செயல்பாட்டின் ON/OFF விவரத்தைக் குறிக்கும்.
அம்சங்கள் இந்த ஸ்பீக்கர் 3.5 SD ஆடியோ இன்புட் மூலம் செயல்படுகிறது. மைக்ரோ ‘bass கார்டு பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் அமைந்துள்ளது. இந்த ஸ்பீக்கர் இரண்டு 1.5 இன்ச் உயர் அதிர்வெண் இயக்கிகள், ஒரு 2.5 இன்ச் ‘bass’ ஒலிக்கான இயக்கி மற்றும் இரண்டு ரேடியேட்டர்களைப் பெற்றுள்ளது. இந்த ரேடியேட்டர்கள் '‘bass’ ஒலியை அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இந்த ஸ்பீக்கரின் எடை 1.1 kgஆகும்.
செயல்பாடு இந்த க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரை ப்ளூடூத் மூலம் இணைப்பது மிகச் சுலபம். ஒருமுறை இணைத்துவிட்டால், பின்பு இந்த ஸ்பீக்கரே அடுத்தடுத்த முறைகளில் இணைக்கப்பட்ட கருவிகளை ப்ளூடூத் மூலம் கண்டுபிடித்து இணைத்துக்கொள்ளும். SD கார்டு தவிர, ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட்களை இணைத்தும் இந்த ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தலாம். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், SD கார்டு ஆகிய எந்தக் கருவிகளைப் பயன்படுத்தினாலும் இந்த க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரிலிருந்து வரும் ஒலியின் தரம் எந்தவித மாற்றமுமின்றி சிறப்பாகவே இருக்கிறது.
இதர சேவைகள் ப்ளூடூத் அல்லாமல், க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரை மைக்ரோ USB கேபிள் மூலமாகவும் கருவிகளோடு இணைக்கலாம். அப்படி இணைத்தால் ஒலியின் தரம் மேலும் சிறப்பாக அமையும். பேட்டரியின் பயன்பாடு சற்று குறையும்.
இந்த ஸ்பீக்கரில் பிரத்யேகமாக அமைந்துள்ள 'ரோர்’ சேவை, ஒலியின் அளவை சற்று அதிகப்படுத்தித் தருகிறது. மற்றும் 'Tera Bassசேவை குறைந்த அளவில் இருக்கும் ஒலியின் 'Bass’ திறனை அதிகரித்துத் தருகிறது. இந்த க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரை போனோடு இணைத்து ஸ்பீக்கர் அழைப்புகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த ஸ்பீக்கரை போர்ட்டபிள் சார்ஜராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பேட்டரி க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கர் 6000mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. க்ரியேட்டிவ் நிறுவனம் இந்த பேட்டரி எட்டு மணி நேரம் வரை உழைக்கும் என்று கூறுகிறது. ஆனால், தினசரி பயன்பாட்டுக்கு இந்த பேட்டரி ஏழு மணி நேரம் வரைதான் தாங்கும்.
பிளஸ்:
டிசைன்
இதர சேவைகள்
மைனஸ்:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives