Sunday 16 November 2014

கேட்ஜெட்ஸ் | அமேஸான் எக்கோ (Amazon Echo)


‘வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்பது இன்றைய டெக் உலகத்தின் பெரும் பயன்பாடு. கூகுளின் ‘கூகுள் நவ்’ (Google Now) ஆப்பிளின் ‘ஸிரி’ (Siri) மற்றும் மைக்ரோசாஃப்ட்டின் ‘கோர்ட்டானா’ (Cortana) ஆகியவை எல்லாம் நமக்குத் தெரிந்த பிரபலமான வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைகள். அந்தவகையில், அமேஸான் நிறுவனம் தனது வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவையான ‘அமேஸான் எக்கோ (Amazon Echo)’ என்ற கேட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது.
டிசைன்!
பார்ப்பதற்கு ஒரு சிறிய சிலிண்டர் போல காட்சியளிக்கும் இந்த ‘அமேஸான் எக்கோ’, கவர்ச்சியான கறுப்பு நிறத்தில் அமைந்துள்ளது. மேல்புறத்தின் ஓரத்தைச் சுற்றி அழகான ‘லைட் ரிங்’ ஒன்றை ‘வால்யூம் ரிங்’குக்கு மேல் அமைத்து உள்ளது. இந்த வால்யூம் ரிங்கை திருப்பி வால்யூமை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். லைட் ரிங்குக்கு நடுவில் ஒரு ‘ஆக்‌ஷன்’ பட்டனும், மைக்ரோ போனை ஆன்/ஆஃப் செய்யும் பட்டனும் அமைந்துள்ளது.
ஆடியோ ஸ்பீக்கர் டிசைன்!
‘அமேஸான் எக்கோ’ வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான டைனமிக்கான ஒலியைத் தரும் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்பீக்கர்கள் 360 டிகிரிகளிலும் ஒலிக்கும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘அமேஸான் எக்கோ’வை ப்ளூ-டூத் மூலம் இயக்கி, நமக்கு விருப்பமான பாடல்களைக் கேட்கலாம். அமேஸான் மியூஸிக் (Amazon Music), ப்ரைம் மியூஸிக் (Prime Music), டியூன்-இன்  (TuneIn), ஐஹார்ட் (Iheart) ரேடியோ போன்ற வசதிகளையும் இயக்கலாம்.
வாய்ஸ் அசிஸ்டென்ட்!

‘அமேஸான் எக்கோ’ எந்த நேரமும் விழிப்புடனே இருக்கும். இதனை ‘அலெக்ஸா’ என்ற கீ-வேர்டு மூலம் அழைக்கலாம். அலெக்ஸா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி,  செய்திகள், வானிலை அறிக்கை, இசை போன்றவற்றை எளிதாக கேட்கலாம். இதில் ஏழுமைக்ரோபோன்கள் உள்ளதால், ஒரு ரூமிலிருந்து எந்த மூலையிலும் எளிதாக அழைக்கலாம். இதன் ‘Noise Cancellation’ டெக்னாலஜி இசைக்கு நடுவில்கூட வாடிக்கையாளரின் குரலை உணர்ந்துவிடும் திறனைக் கொண்டுள்ளது.

அமேஸான் எக்கோ அப்ளிகேஷன்!
அமேஸான் எக்கோ ஆப்ஸ், ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, ஃபையர் ஓஎஸ், டெஸ்க்டாப் என பெரும்பாலான இயங்குதளத்தில் கிடைக்கிறது. Wi-Fi மூலம் முழுநேரமும் ‘அமேஸான் எக்கோ’ இணைக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் குரல் மற்றும் சொல் உச்சரிப்புக்கேற்ப, ‘அமேஸான் எக்கோ’ அதன் திறனை வளர்த்துக் கொள்ளும். ‘அமேஸான் எக்கோ’ வாடிக்கையாளர்களுக்கு $199 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த விலை கொஞ்சம் அதிகம்தான். இன்றைய நிலையில் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைகள் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களிலும் வந்துவிட்டதால், அதிக விலை கொடுத்து இதை தனியாக வாங்குவார்களா என்பது சந்தேகமே. தற்போதைய நிலையில் இந்த ‘அமேஸான் எக்கோ’ அமேஸான் வலைதளத்தில் மட்டுமே வர்த்தகமாகி வருகிறது.

Link:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=100758&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=4

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives