Sunday 20 July 2014

கேட்ஜெட்ஸ் | எல்ஜி ஜி3 (LG G3)

எல்ஜி ஜி3 என்கிற ஸ்மார்ட்  போனை அறிமுகப் படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம். இது ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. இன்டர்னல் மெமரி 16ஜிபி போன் ரூ.46,990 விலையிலும், 32ஜிபி போன் ரூ.49,990 விலையிலும் இந்திய மார்க்கெட்டில்  ஜூலை 25-ம் தேதி கிடைக்கும் எனவும், இதற்கான ஆர்டரை ஜூலை 21 முதல்  ஆன்லைனில் ஆரம்பிக்கலாம் என்றும் எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 5.5 இன்ச் அகலமான 1440x2560 பிக்ஸல் QuadHD டிஸ்ப்ளே 534 ppi  என்னும் மிகத் துல்லியமான டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இதனால் உலகத்தின் மிகத் துல்லியமான டிஸ்ப்ளேவை கொண்ட போன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த போன், இரண்டு வகையான ரேமை கொண்டு இயங்குகிறது. அதாவது, 16ஜிபி மொபைல் 2ஜிபி ரேம் வசதியோடு வரும். 32ஜிபி மொபைல் போன் 3ஜிபி ரேம் வசதியோடு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். 16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வரும் இந்த போனை எஸ்டி கார்டு மூலம் 128ஜிபி வரை விரிவுபடுத்தலாம்.
இந்த போனில் உள்ள 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவை எல்இடி பிளாஷ் வசதியோடு பெற்றுள்ளது. மற்றும் 2.1 மெகாபிக்ஸல் முன்புற கேமராவையும் பெற்றுள்ளது. இந்த இரு கேமரா மூலமும் முழு நீள ஹெச்டி வீடியோவை ரெக்கார்டு செய்யலாம். இந்த கேமரா சக்திவாய்ந்த லேசர் ஆட்டோஃபோகஸைக்  கொண்டுள்ளது.
3G, GPRS/EDGE, WiFi, ப்ளூடூத் போன்ற வசதிகளோடு வரும்  இந்த போன் 4ஜி தொழில்நுட்பத்தைக்  கொண்டுள்ளது. 3000mAh பேட்டரியைக் கொண்டு இயங்கும் இந்த  போன் மற்ற ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் சிறந்த பேட்டரி சேமிப்பை தரும் என்கிறது எல்ஜி நிறுவனம். 
லேட்டஸ்ட் தொழில்நுட்பம், பவர்புல் பேட்டரி, துல்லியமான டிஸ்ப்ளே, சீரான டிசைன் என பல சிறப்புகளைக்கொண்ட இந்த போன்  வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது!

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives