Sunday 25 May 2014

Family Financial Planning | ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் | Nanayam Vikatan | நாணயம் விகடன்

அவசரத்துக்கு ஆர்.டி.!

 ரமணி சந்திரமோகன், ஈரோடு.
'நான் ஒரு வங்கி ஊழியர். என் கணவர் ஒரு பிசினஸ்மேன். எனக்கு ஒரு மகள். விரைவில் திருமணம் ஆகப் போகிறது. மகன், பள்ளி முடித்து கல்லூரிக்கு செல்ல இருக்கிறான். நானும் என் கணவரும் சேர்ந்து மாதத்துக்கு ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறோம். ஒரு மாதத்துக்கான செலவை நாங்கள் இருவரும் சரி பாதியாகப் பிரித்துக்கொள்வோம்.

உதாரணமாக, வீட்டுக்குத் தேவையான பொருட்கள், மின்சாரம், தொலைபேசி போன்ற செலவை என் கணவர் பார்த்துக்கொள்வார். பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகள், துணிமணிகள் போன்ற செலவுகளை நான் கவனித்துக்கொள்வேன். மேலும், நானும் என் கணவரும் சேர்ந்து மாதந்தோறும் 15,000 ரூபாய் சேமித்துவிடுவோம். இதை எங்கள் குழந்தைகளுக்காக சேமிக்கிறோம். ஏதாவது அவசர செலவு ஏதேனும் நேரிட்டால், எந்தவழியும் இல்லாத நிலையில் இந்தச் சேமிப்பில் கைவைப்போம்.
இதுதவிர, வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ சிறு தொகையை ஆர்.டி. கணக்கில் சேமிப்போம். இது, அவசர காலத்தில் பக்கபலமாக இருக்கும். மேலும், எங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காக ரூ.2000 - 3000 வரை இன்ஷூரன்ஸ் மூலம் சேமிப்போம். இதுதான் எங்கள் ஒரு மாதத்துக்கான பட்ஜெட்.'


செய்தி, படம் -  கிஸோர் பிரசாத் கிரண்.

Link:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=95251&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=6

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives