Sunday, 6 April 2014

கேட்ஜெட் | ஜியோனி இலைஃப் இ7 (Gionee Elife E7)

அதிக பிக்ஸலுடன் முன்புற கேமரா!செ.கிஸோர் பிரசாத் கிரண்
இன்றைக்கு மொபைல் துறையில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராண்டு, ஜியோனி (Gionee). இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட் போன் ஜியோனி இலைஃப் இ7 (Gionee Elife E7).
இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 4.2-ல் இயங்குகிறது. 5.5 இன்ச் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் தொடுதிரையைக் கொண்டுள்ள இந்த போன், 401 ppi திறன் கொண்டுள்ளது. 2.5 GHz QuadCore பிராசஸரையும் Qualcomm Snapdragon 800 Soc என்னும் கிராபிக்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது.
மேலும், 3 ஜி.பி. ராம் மற்றும் 2500 mAh திறன் கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், வாடிக்கையாளர்களுக்கு 16 ஜி.பி மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் வடிவத்தில் கிடைக்கும். மேலும், ஏழு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 மெகா பிக்ஸல் பின்புற கேமராவையும் 8 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் உள்ள முன்புற கேமரா அதிக அளவிலான பிக்ஸல்
(8 மெகா பிக்ஸல்) கொண்டது என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. பின்புற கேமரா உயர்தர  சென்ஸாரைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகச் சிறந்த படங்களை உடனுக்குடன் எடுத்துவிடலாம்.
16 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட இந்த  ஸ்மார்ட் போனின் விலை ரூ.24,000, 32 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட் போனின் விலை ரூ.27,000 என்ற விலைகளில் விற்கப்பட்டு வருகிறது.

Link:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=93778&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=7

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives