Sunday 16 February 2014

இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்! | Instant Messaging Apps | Nanayam Vikatan | நாணயம் விகடன்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபலமாகி வருகிறது 'வாட்ஸ்ஆப்’ (WhatsApp) என்கிற 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ என்கிற ஆப்ஸ்... உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் அசால்ட்டாக அனுப்பலாம். இந்த 'வாட்ஸ்ஆப்’ மாதிரியான வேறு சில 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ ஆப்ஸ்களை இப்போது பார்ப்போம்.

 வைபர் (Viber)
என்னதான் வாட்ஸ்ஆப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதில் வாய்ஸ்கால்கள் இல்லை. வைபரின் முக்கிய அம்சமே வாய்ஸ்கால்கள்தான். மிகக் குறைவான செலவில் இன்டர்நெட்டை பயன்படுத்தி பேசிக்கொள்வதற்கு இந்த 'வைபர்’ உதவி செய்கிறது. தவிர, மெசேஜ், ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் போன்றவற்றையும் தாராளமாக அனுப்பலாம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
பிபிஎம் (BlackBerry Messenger)
பிபிஎம் ஆப்ஸ்-ன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்புதான். பிபிஎம் ஆப்ஸை மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு 'பிபிஎம் பின்’ வழங்கப்படும். இதுபோல மற்றவர்களின் 'பிபிஎம் பின்’ இருந்தால் தான் அவர்களுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். இது பாதுகாப்பான அம்சமாக இருந்தாலும், இதன் வடிவமைப்பு பயன்படுத்துபவர்களை கவரும்படி இல்லை.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 1-5 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.

ஹைக் (Hike)
'ஹைக்’ ஆப்ஸ் வாட்ஸ்ஆப்பைப் போன்றதே. ஆனால், வாட்ஸ்ஆப்பில் இல்லாத சிறப்பம்சம் ஒன்று ஹைக் ஆப்ஸில் இருக்கிறது. அதாவது, இன்டர்நெட் வசதி இல்லாத சமயத்தில் பயனாளர்கள் 'ஹைக்’ அக்கவுன்டுக்கு யாராவது மெசேஜ் அனுப்பி இருந்தால், அந்த மெசேஜ்கள் சாதாரண மெசேஜ்களாகப் பெறப்படும். இன்டர்நெட் கிடைக்காத இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 50 லட்சம் - 1 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
லைன் சாட் (Line Chat)
'லைன் சாட்’தான் தற்போதைய மார்க்கெட்டின் ஹாட் செல்லிங் ஆப்ஸ். பார்க்கக் கவர்ச்சியாகவும், பயன்படுத்த எளிதாகவும் அமைந்திருக்கும் இந்த ஆப்ஸின் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ, வாய்ஸ் மெசேஜ் என அனைத்தையும் அனுப்பலாம். மேலும், வீடியோ சாட்கள் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் இந்த ஆப்ஸில் மிகச் சுலபம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
குரூப் மீ (Group Me)
குரூப் சாட்களுக்கான பிரத்யேகமான ஆப்ஸ் 'குரூப் மீ’. தோற்றத்திலும், பயன்பாட்டிலும் எளிமையாகவும் விரைவாகவும் இயங்கக்கூடிய 'குரூப் மீ’ ஆப்ஸ் மூலம் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நண்பர்கள், வியாபார ரீதியாக வீடியோ கான்ஃபரன்ஸ் என அனைவரும் ஒன்றாக குரூப் சாட் செய்ய முடியும். இதன் மூலமும் மெசேஜ், லொக்கேஷன் (பயனாளர் இருப்பிடம் குறித்த விவரங்கள், ரூட் மேப் போன்றவை), ஆடியோ, வீடியோ மற்றும் கான்டக்ட்களை அனுப்பலாம்.
ஹைலைட்: இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 லட்சம் பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
மேலே சொன்ன ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதுவும், இதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதுவும் கூடுதல் சிறப்பு.

Link:
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=92254&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=8

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives